கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்பட 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஓஎன்ஜிசி பொருட்கள் சேத வழக்கில் ஏற்கனவே ஜெயராமனுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் கதிராமங்கல போராட்ட வழக்கிலும் இன்று ஜாமீன் கிடைத்துள்ளது. இதனால் ஜெயராமன் உள்பட 8 பேர் இன்று மாலை சிறையில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். பேராசிரியர் ஜெயராமன் மதுரை மாவட்ட நீதிமன்றத்திலும், மற்ற 7 பேரும் திருச்சி மாவட்ட நீதிமன்றத்திலும் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.