இன்று பிறந்த நாள் காணும் அஞ்சலிக்கு நடிகர் ஜெய் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘எனக்கு நீ எவ்வாறு ஸ்பெஷலாக இருக்கிறாயோ, அதே போன்ற நாளாக இன்றைய நாள் அமையட்டும். நீ நீயாக இருந்து என் நாட்களை சிறப்பானதாக மாற்றுகிறாய். கடவுளும் நானும் எப்போதும் உன்னுடன் இருப்போம். ஹேப்பி பர்த் டே அஞ்சு’ என்று செல்லமாக காதல் மொழியில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார் ஜெய். இதைக் கண்ட அஞ்சலி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். என்னுடன் இருப்பதற்கு நன்றி ஜெய் என்று டிவிட்டரில் கூறியுள்ளார்.