அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’

ஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர்  ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’

சென்னையை மையமாகக் கொண்டு, பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் சுமார் 1000 எபிசொடுகளுக்கும் மேலாக நிகழ்ச்சி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த கலை-கற்பனை நயமிக்க தயாரிப்பாளரான வினோத் ஜெயின், முதல் முறையாக திரைப்படத் துறையில் இப்படத்தின் மூலம் தடம் பதிக்கிறார்.

இத்திரைப்படம் ஒரு வித்தியாசமான குரூர எண்ணங்கொண்ட ஒரு கொலைகாரன், தனது அழகு, பண்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறான். அப்படி ஒரு முயற்சியின் போது, ஒரு பெண்ணை, காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான்.  அவளையும் ஏமாற்றிட நினைக்கும் போது, விதி வேறு விதமாக நினைக்கிறது. இப்படி ஒரு பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதை, ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா’.  

இப்படத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி உடன் இணைந்து தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எம். வீ பன்னீர்செல்வம் கதை, திரைகதை, ஒளிப்பதிவு செய்ய,

அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன், அடையார் திரைப்பட கல்லூரியில் டிஎஃப்டி பயின்றவர், பல விளம்பரப் படங்களை இயக்கி,இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் பணியாற்றிய
ஜே பார்த்திபன் இயக்கியிருக்கிறார்.
சுதர்சன் படத்தொகுப்பை கவனிக்க, மிலன்& எஸ் ராஜாமோகன் கலை இயக்கத்திற்குப் பொறுப்பேற்க, அதிரடி சண்டை காட்சிகளை தளபதி தினேஷ் மற்றும் ஸ்ரீதர் அமைத்திருக்கிறார்கள். அருள் தேவ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.

ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பொள்ளாச்சி, மூணாறு, தலைக்கோணம், சென்னை, ஊட்டி, மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் அருமையான காட்சியமைப்புகளுடன் உருவாகியிருக்கும் ‘மிருகா’ வெகு விரைவில் வெளியாக இருக்கிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
ஸ்ரீகாந்த்
ராய் லக்ஷ்மி
தேவ் கில்
நைரா
வைஷ்ணவி சந்திரன் மேனன்
த்விதா
பிளேக் பாண்டி
தயாரிப்பு: ஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின்
இயக்கம்: ஜே பார்த்திபன்
கதை, திரைகதை, ஒளிப்பதிவு: எம் வி பன்னீர்செல்வம்
கிரியேடிவ் புரொட்யூசர்: எம் நரேஷ் ஜெயின்
வசனம்: ஏ.ஆர்.பி.ஜெயராம்
படத்தொகுப்பு: சுதர்சன்
இசை: அருள் தேவ்
கலை: மிலன் & எஸ் ராஜமோகன்
சண்டை பயிற்சி: தளபதி தினேஷ், ஸ்ரீதர்,விஜய்
வி எஃப் எக்ஸ்: நேக் ஸ்டுடியோஸ்
தயாரிப்பு நிர்வாகம்: பழனியப்பன்
ஸ்டில்ஸ்: மோதிலால்  
விளம்பர வடிவமைப்பு மற்றும் மோஷன் தீசர்–ஆர்-ஆர்ட் ஸ்டுடியோ
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்