பாரதிராஜா சாதனையாளர்.; நான் அப்படி பேசியிருக்க கூடாது – சந்தோஷ் பி ஜெயக்குமார்

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள ‘இரண்டாம் குத்து’ பட டீசர் கடந்த வாரம் வெளியானது. இது ஆபாச படங்களை மிஞ்சும் வகையில் இருந்தது. 

இப்பட டீசருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார் பாரதிராஜா.

“இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்?? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?.. என தெரிவித்திருந்தார் பாரதிராஜா.

இதற்கு பதில் கொடுக்கும் வகையில்…

1981 ல் கமல், மாதவி நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தை எடுத்தீர்கள். அதை பார்த்து கூசாத கண்ணு இப்போ கூசுறீச்சோ..? என கேள்வி கேட்டு டீ பீஸ் உடையில் மாதவி & கமல் இருக்கும் படங்களை தன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இப்போ திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

நான் அப்படி சொல்லியிருக்க கூடாது. பாரதிராஜா ஒரு சாதனையாளர். என  தன் ட்வீட்டுக்கு (பேச்சுக்கு) வருத்தம் தெரிவித்துள்ளார்.