குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் பேட்டி அளிக்கையில், கட்சியை கைப்பற்ற நினைத்ததால் தான் டிடிவி தினகரனை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கட்சியிலிருந்து நீக்கினார் என்று தெரிவித்துள்ளார். வேலூர் பொதுக் கூட்டத்தில் டிடிவி தினகரன் தன்னை பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார் எனக் கூறிய அவர், அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சிங்கப்பூரில் இருந்து கைது செய்து அழைத்து வரப்பட்டவர் டிடிவி என்றார். மேலும், மன்னிப்பு கடிதம் தந்தபிறகு சசிகலாவை மட்டும் சேர்த்தார் ஜெயலலிதா என்றும் ராமச்சந்திரன் குறிப்பிட்டார்.