“சர்வதேச இந்திய பொங்கு தமிழ் மற்றும் வர்த்தகக் கண்காட்சி – 2019”

2014 – ம் ஆண்டு மலேசியாவின் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியின் முயற்சியில் உருவானது பொங்கு தமிழ் தமிழகக் கலைஞர்கள் உலகெங்கிலும் சென்று பாரம்பரிய கலைகளை நிகழ்த்துவது அனைவரும் அறிந்ததே 201 4 – ல் தமிழகக் கலைஞர்கள் மலேசியாவில் நடத்திய பொங்கு தமிழ் கலை விழாவை நடத்திய A S T R O இக்கலைகளை மலேசியாவில் அண்டை நாட்டிலும் பரப்பும் நோக்குடன் ஒரு புதிய முயற்சியைகையில் எடுத்தது .

வருடந்தோரும் – 5 இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களை தேர்வு செய்து அவர்களை தமிழ்நாட்டில் பாரம்பரிய கலைகளை பயில பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்து , தமிழகத்தில் புகழ்பெற்ற ஆசான்கள் ஒவவொரு வருடமும் பல்வேறு கலைகளில் மலேசியகலைஞர்களுக்கு பயிற்சி அளித்தனர் .

தஞ்சை , கன்னியாகுமரி மதுரை , ஊட்டி போன்ற இடங்களில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்ட பயிற்சிப்பட்டறைகளில் சுமார் 80 போ மலேசியக கலைஞர்கள் முழுமையாக இக்கலைகளை தேர்ச்சி பெற்று வருடம்தோறும் ASTRO தொலைக்காட்சியினால் மலேசியாவில் நடத்தப்படும் பொங்குதமிழ் கலை நிகழ்ச்சிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்து வருகின்றனர் .

இப்பொழுது தமிழ் கலை நிகழ்ச்சியின் போது கலைநிகழ்ச்சிகள் மட்டுமின்றி தமிழ் பாரம்பரிய உணவுகளும் ஏராளமான மக்களுக்கு பரிமாறப்பட்டன் மலேசியா சிங்கப்பூர் மொரீசியஸ் நாடுகளில் தொடங்கி முதல்முறையாக பொங்குதமிழ் சென்னையில் கால் பதிக்கிறது .

ஜனவரி 4 , 5, 6 நாட்களில் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இவ்வரு நிகழ்வை மலேசியக் கலைஞர்கள் சுமார் 40 – க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு இக்கலைகளை பயிற்றுவித்த ஆசான்களோடு இணைந்து இக்கலைகளை நிகழ்த்த விருகின்றனர் .