இடைக்காலத்தடை, உடற்கல்வி ஆசிரியர் பணியிடத் தேர்வுக்கு

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  நாளை நடைபெற இருந்த உடற்கல்வி ஆசிரியர் பணியிடத் தேர்வுக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது. 

ஜெயக்குமார் மற்றும் ராஜேஷ் கண்ணா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில், “என்சிபிஇ 2வது அட்டவணை விதிமுறைப்படி உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தகுதி நிர்ணயம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே நாளை நடைபெற இருக்கும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடத் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும்” என கூறியிருந்தனர்.  இந்த வழக்கின் இன்றைய விசாரணையில், நாளை நடக்கவிருந்த உடற்கல்வி ஆசிரியர் பணியிடத் தேர்வுக்கு மதுரைக்கிளை இடைக்காலத்தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.