ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவுடனான டி20 தொடரில் இருந்து விலகல்

Ardhanaari audio launch

ஆஸ்திரேலியா அணி, இந்தியாவுக்கு எதிராக ஐந்து ஒருநாள் மற்றும் மூண்று டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. தற்போது நடந்து வரும் ஒருநாள் போட்டியில், இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கின்றது.  இந்த நிலையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ், காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால், ஒருநாள் தொடர் முடிந்தவுடன், டி20 தொடரில் இருந்து அவரை விடுவிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

காயம் காரணமாக கம்மின்ஸ் இந்த வருடம் கணிசமான அளவு போட்டிகளிலேயே பங்கேற்றுள்ளார். ஆஷஸ் தொடரை கருத்தில் கொண்டு, கம்மின்ஸுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், கூடிய விரைவில் மாற்று வீரர் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது.