ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவில் நடைமேடையில் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். டரகோனா ((Tarragona)) மாகாணத்திலிருந்து புறப்பட்ட அந்த பயணிகள் ரயில், பார்சிலோனா நிலையத்தை நெருங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக ஓடியது. இதனால், ஆர் 2 தடத்தில் வந்த ரயில், நடைமேடையின் மீது பலத்த சத்தத்துடன் மோதி நின்றது. இதனால் ரயிலின் ஓட்டுநர் இருந்த முதல் பெட்டியும், நடைமேடையும் பலத்த சேதமடைந்தன. விபத்தில், ஓட்டுநர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.