தெற்கு முத்துலாபுரம் கிராமத்தில் உள்ள கோபாலகிருஷ்ணசுவாமி கோவில் மகாகும்பாபிஷேக விழாவிற்கு மதிமு பொது செயலாளர் வைகோ வருகை தந்தார். அவருக்கு கிராம மக்கள் சார்பில் மேள, தள முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில் நான் அனைத்து சமயம் மற்றும் ஆலயங்களையும் மதிப்பவன் நான் என்று கூறிய வைகோ சிம்பொனி இசை மூலம் உலகப்புகழ் பெற்ற இசைஞானி இளையராஜா வை உலகநாடுகள் பாராற்றிய நிலையில் இந்திய அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை நான் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி மதுரையில் விழா எடுத்தேன் தற்போது அவருக்கு பத்மபூசன் விருது கிடைத்துள்ளது அவரால் அந்த விருதுக்கு பெருமை என்றார்.
மீனவர்கள் பிரச்சினை கடந்த ஓன்றை ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசு சட்டத்தினை கொண்டு வரபோகிறார்கள், தமிழக மீனவர்களின் வாழ்வாதரம் அழிந்து விடும் என்று பிரதமரை மோடியை நேரில் சந்தித்து முறையிட்டேன்,தடுத்து நிறுத்துங்கள் என்று சொன்னேன், இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினேன், இந்தியரசு கண்டுகொள்ளவில்லை, இன்றைக்கு மசோதவை சட்டமாக்கியுள்ளனர். அதே போன்று பேருந்து கட்டண உயர்வு மக்களை பெருமளவு பாதித்துள்ளது. யாரும் துண்டிவிட்டு போராடவில்லை, மக்கள், மாணவர்கள் அவர்களாக போராடுகின்றனர்.
தமிழக அரசு கௌரவ பிரச்சினை பாராமால், மக்கள் தலையில் ஏற்றப்பட்ட சுமை என்று கருதி அந்த கட்டண உயர்வினை திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுகொள்கிறேன். இராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. எரிவாயு குழாய் பதிப்பு கருத்து கேட்பு கூட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு ஏற்கனவே கேஸ் பிரச்சனையில் எதிர்த்து போராடி கொண்டிருக்கிறேன்.
மக்கள், விவசாயிகள், கடுமையான எதிர்ப்பை இத்திட்டத்திற்கு தெரிவிப்பார்கள் என்றார். பேட்டியில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஸ், கோவில்பட்டி நகர செயலாளர் பால்ராஜ், ஒன்றிய செயலாளர் எரிமலை வரதன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராஜசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.