மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் 2017ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டியலில் 8-வது இடத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பிடித்துள்ளது.
தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் பெங்களூர் முதலிடத்தையும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 2-வது இடத்தையும், பனாரஸ் இந்து யுனிவர்சிட்டி 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
நாட்டின் சிறந்த கல்லூரிகள் பட்டியலில் சென்னை லயோலா கல்லூரி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தை டெல்லியின் மிரந்தா ஹவுஸ் கல்லூரி பிடித்துள்ளது. இதுபோல 4-வது இடத்தை திருச்சி பிஷப் ஹெபெர் கல்லூரியும், 10-வது இடத்தை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியும் பிடித்துள்ளன.
IIT Madras, the choice of the country's best engineering college