திமுக பிரமுகர் அஞ்சுகம் பூபதி திருமண விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தில் தற்போது செயல்படாத ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தை காப்பாற்றுமாறு எனக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வருகின்றன. தமிழகத்தில் தற்போது மைனாரிட்டி ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழக அரசியல் விவகாரம் குறித்து குடியரசு தலைவர், ஆளுநரிடம் நேரில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆட்சியை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆட்சி கவிழும் வரை சட்ட ரீதியாகவும், மக்கள் மன்றத்திலும் போராட்டம் தொடரும். ஆட்சி மாற்றம் விரைவில் அல்ல நொடிப்பொழுதில் வர வாய்ப்பு உள்ளது. திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தற்போதைய அரசை கவிழ்க்க முயற்சிக்கவில்லை. தமிழக மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே திமுக ஆட்சிக்கு வர விரும்புகிறது. என்று கூறினார்.