கேப்டன் மிதாலிராஜ் செல்பி புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

மிதாலிராஜ் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தோழிகளுடன் செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் அதில் மிதாலிராஜ் டி-சர்ட் அணிந்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிதாலி ராஜின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதில் நீங்கள் இந்திய பெண் இத்தகைய ஆடைகளை அணிவதை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை, மேலும் தமிழ்நாட்டு பெண்ணாகிய நீங்கள் இப்படி பட்ட ஆடைகளை அணியக்கூடாது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.