காதலையும் கம்ப்யூட்டரையும் இணைத்து உருவாகும் ‘இதுதான் காதலா’

குறிஞ்சி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.எஸ்.முருகன் தயாரித்து வரும் திரைப்படம் ‘இதுதான் காதலா’.

இந்தப் படத்தில் கதையின் நாயகனாக சரண், நாயகியாக அஷ்மிதா, இரண்டாவது நாயகியாக ஆயிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.

தவிர, படத்தில் இடம் பெறும் மனித ரோபோ கேரக்டரில் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான வி.எஸ்.முருகன், ‘ராஜசிம்மன்’ என்கிற புனைபெயரில் நடிக்கிறார்.

இவர்களுடன் ‘காதல்’ சுகுமார், ‘கூல்’ சுரேஷ், பாலு ஆனந்த் ‘பயில்வான்’ ரங்கநாதன், சின்ராஜ், திருப்பூர் தெனாலி, தென்னவராயன், பாலாம்பிகா, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – கணேஷ்ராஜா, இசை –சங்கர், படத் தொகுப்பு – எஸ்.எம்.பி.சுப்பு, கலை இயக்கம் – ராஜரத்தினம், பாடல்கள் – கவிஞர் வானம், யாமினி, குணசேகரன், மௌலன், ராஜசிம்மன், தயாரிப்பு – வி.எஸ்.முருகன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு, இயக்கம் – வி.எஸ்.முருகன் என்ற ராஜசிம்மன்.

இத்திரைப்படம் ஒரு விஞ்ஞான ரீதியான கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. காதல்  என்பதை காலம்தான் நிர்ணயிக்கும் என்பதை வலியுறுத்தி காதலையும் கம்ப்யூட்டரையும் இணைத்து புதிய பாணியில் திரைக்கதை அமைத்து இந்த ‘இதுதான் காதலா’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசன், ‘ஊமை விழிகள்’இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ், படத்தில் நடித்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.