கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டியில் கயத்தார் ஊராட்சி ஒன்றியம் சார்பில் கிராமங்களில்முழுசுகாதாரம் ஏற்படுத்தும் வகையிலும், திறந்த வெளி மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும், அனைத்து வீடுகளிலும் கழிப்பறை அமைப்பதன் நோக்கத்தினை பொது மக்களுக்கு வலியுறுத்தும் வகையிலும், பிளாஸ்டி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட மனிதசங்கிலி விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வானரமுட்டி அரசு மேல்நிலை பள்ளி முன்பு தொடங்கிய பேரணியை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் தொடங்கி வைத்தார். வானரமுட்டி கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணி கல்லூரணி பேருந்து நிறுத்ததில் நிறைவுபெற்றது.இதில் திரளான பள்ளி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளுடன் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்புகாசயம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை துணை வட்டாட்சியர் ஈஸ்வரன், ஊராட்சி செயலாளர் விஜி ஆகியோர் செய்து இருந்தனர்.