ஹாட்ஸ்பாட் விமர்சனம்

KJB டாக்கீஸ் & 7 வாரியர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், கலையரசன், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, கெளரி கிஷன், ஜனனி ஐயர், சாண்டி மாஸ்டர், சுபாஷ் செல்வம், சோபியா, விக்னேஷ் கார்த்திக் ஆகியோர் நடிப்பில் வெளி வரவிருக்கும் படம் ஹாட்ஸ்பாட்.

தயாரிப்பாளரிடம் வாய்ப்பு கேட்டு போகும் இயக்குனர் நான்கு கதைகளை சொல்கிறார் அந்த கதைகள் மூலமே படம் ஆரம்பமாகிறது.

ஆதித்யா பாஸ்கரன் கௌரி கிருஷ்ணனும் காதலிக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெற்றோர்கள் பேசுகிறார்கள். பெண் ஆணுக்கு தாலி கட்டி ஆண் மாமியார் வீட்டிற்கு சென்று பெண் செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் ஆண் செய்கிறான் இதன் விளைவு என்ன? இது எப்படி சாத்தியம் என்பதே முதல் கதையின் முடிவு

சாண்டி மாஸ்டரும் அம்மு அபிராமியும் இரண்டாவது கதையில் நடித்திருக்கிறார்கள். இருவரும் காதலிக்கிறார்கள், திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அம்மு அபிராமி அவருடைய மாமாவை திருமணம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் முடிவு செய்கிறார்கள். ஆனால் அம்மு அபிராமியோ சாண்டியை காதலிப்பதாக கூறிவிடுகிறார். பெற்றோரும் சம்மதம் தெரிவிக்க சாண்டி மாஸ்டர் வீட்டில் சம்மதம் வாங்குவதற்காக அம்மு அபிராமியை அழைத்துச் செல்கிறார். இருவரும் காதலிப்பதாக சொல்ல அம்மு அபிராமி யார் என்று விசாரிக்கிறார்கள் சாண்டியின் பெற்றோர். அதன் பிறகு அவர்கள் எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடக்கிறது அது என்ன என்பதே இரண்டாவது கதை. இந்த கதைக்கு முடிவு என்ன என்பது இயக்குனருக்கே தெரியவில்லை.

மூன்றாவது கதையில் சுபாஷும் ஜனனியும் காதலிக்கிறார்கள். பத்திரிக்கையாளராக இருக்கிறார் ஜனனி. தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார் சுபாஷ். ஒருவித செய்கையால் வேலையை இழந்துவிடுகிறார் சுபாஷ். மூன்று மாதங்கள் இப்படியே கடக்க வேலை கிடைக்காத விரக்தியில் இருக்கும் சுபாஷை, ஒருவர் ஆண் விபச்சார தொழிலுக்கு அறிமுகப்படுத்துகிறார். சுபாஷ் அதற்கு சம்மதம் தெரிவித்து அந்த தொழிலை செய்கிறார். இந்த விஷயம் ஜனனிக்கு தெரிய வர என்ன நடந்தது என்பதை மூன்றாவது கதையின் மீதிக்கதை.

நான்காவதாக கலையரசன் சோபியா இருவரும் கணவன் மனைவியாக வருகிறார்கள். இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு பெண்ணும் நான்கு வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். தனியார் தொலைக்காட்சியில் லிட்டில் ராஜா லிட்டில் ராணி என்று ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி நடிக்கிறார் அவர்களின் மகள். அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றி பெற்று அடுத்தடுத்த சுற்றுக்கு செல்கிறார் கலையரசன் மகள். இதனால் அவர்களுடைய வாழ்க்கை பணரீதியாக சற்று மாறுகிறது. இப்படி போய்க் கொண்டிருக்கும் சூழ்நிலையில் கலையசையின் மகள் ஒருநாள் இறந்து விடுகிறார். ஏன் அவர்களின் மகள் இறந்து போகிறாள்? அதற்கான காரணம் என்ன என்று கலையரசன் சொல்வது மனதை உருக்குவதாக உள்ளது. அப்படி என்ன காரணம் என்ன என்பதை இந்த கதையின் மீதிக்கதை.

ட்ரைலரில் பார்த்து முகம் சுளித்தது போல் படம் இல்லை என்றே சொல்லலாம் நான்கு கதைகளுமே சமுதாயத்திற்கு ஒவ்வொரு மெசேஜையும் சொல்லிவிட்டு செல்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்து & இயக்கம் : விக்னேஷ் கார்த்திக்
தயாரிப்பாளர்கள் : K.J பாலமணிமார்பன், சுரேஷ் குமார், கோகுல் பினோய்.
வெளியீடு : சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் தினேஷ் கண்ணன்
ஒளிப்பதிவு : கோகுல் பினோய்
இசை : சதீஷ் ரகுநாதன் | வான்
படத்தொகுப்பு : முத்தையன் யூ
கலை : சிவா சங்கரன்
நிர்வாக தயாரிப்பாளர் : ஆர். பாலாகுமார்
தயாரிப்பு மேற்பார்வை : பிரியான்
சேர்க்கை உரை & திரைக்கதை ; கிஷோர் சங்கர்
VFX : Fix it in போஸ்ட் ஸ்டூடியோ
DI : நாக் ஸ்டூடியோ
கலரிஸ்ட் : பிரசாத் சோமசேகர்
ரி- ரிகார்டிங் மிக்ஸர் : ஹரி பிரசாத் எம் ஏ
கூடுதல் கலை : கோபிநாத் எம்
கூடுதல் தொகுப்பு : அஷ்வின்
பிரமோஷன் திஜிட்டலி பவர்புல்
பி.ஆர்.ஓ : வேலு
பப்லிசிட்டி டிசைனர் : ராஜின் கிருஷ்ணன்
டைட்டில் டிசைன் : ட்வென்டி ஒன் ஜி
இயக்குநர் குழு :
எம் பி எழுமலை, சபரி மணிகண்டன், மாதவன் ஜெயராஜ், M பிரபாகரன் ஜாய், வெற்றி AJK