தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பலத்த மழை

வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தமிழக கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகடலோர மாவட்டங்களிலும் இதன் தாக்கும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ் நாட்டில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம் ஆகிய வட கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும்” என்று கூறப்பட்டுள்ளது.