விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பலத்த மழை

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த பலத்த மழையால் விழுப்புரம் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ள. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும் பேருந்துகள் மழை நீரில் ஊர்ந்து செல்கிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பல உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இங்கு தேங்கி நிற்கும் மழை நீரால் விழுப்புரத்தில் பல தோற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது எனவே தற்காலிக மோட்டார்களை அமைத்து உடனடியாக மழை நீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் தெரிவிக்கின்றனர். -விழுப்புரம் மைக்கேல் ராஜ்