கோவில்பட்டி பகுதியில் பலத்த மழை – மக்கள் மகிழ்ச்சி

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பல மாதங்களுக்கு பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்ததது. தொடர்ந்து இலேசான சாரல் மழை அவ்வப்போது பெய்து வந்தது. இந்நிலையில் இன்று காலையில் வெயில் அடித்தாலும், மதியம் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காண்ப்பட்டது. தொடர்ந்து இலேசான சாரலாக சுமார் 20 நிமிடங்கள் பெய்ய தொடங்கிய மழை நேரம ஆக ஆக பலத்த மழையாக மாறியது. கோவில்பட்டி , சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்ததது. இதனால் நிலத்தடி நீர் அதிகரிப்பது மட்டுமின்றி காய்ந்து போய் கிடந்த குளங்களில் நீர் வரத்து வர தொடங்கியுள்ளதால் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.