இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில், சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா டி, வாட்ஸ்அப் மணி, டெப்னிதா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஹார்டின்.
காதல், நினைவுகள் மற்றும் வாழ்க்கை கொடுக்கும் இரண்டாவது வாய்ப்பு ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘ஹார்ட்டின்’.
ராஜஸ்தானில் இருக்கும் ஜெய்பூரில் தமிழக உணவகம் நடத்தி வருகிறார் சனந்த், ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் இமயா, சனந்தை காதலிக்கிறார்.
வாழ்க்கையை ஒன்றாக தொடங்க திட்டமிடும் நேரத்தில் நிகழும் விபத்து, அவர்களின் உறவையே கேள்விக்குறியாக்குகிறது.
விபத்துக்குப் பிறகு காதல் நினைவுகளை இழந்த சனந்த், தனது பழைய காதலையும் காதலி மடோனா செபஸ்டினை தேடி ஊட்டிக்கு செல்கிறார் சனந்த்.
அவருடன் இமையாவும் சேர்ந்து பயணிக்கிறார். அங்கு ஏற்படும் உணர்ச்சி மோதல்களும், நினைவுகளும், காதலுமே ஹார்டின் படத்தோட மீதிக்கதை.
சனந்த் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான காதல், குழப்பம், ஏக்கம் போன்ற உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கதையின் இறுதிப்பகுதியில் அவரது நடிப்பு ரசிகர்களை நெருக்கமாக இணைக்கிறது.
அறிமுக நாயகியாக நடித்துள்ள இமயா, இயல்பான நடிப்பின் மூலம் கவனத்தை ஈர்க்கிறார். காதலின் வலியையும், எதிர்பார்ப்பையும் மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.
மடோனா செபாஸ்டின் குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும், கதையின் உணர்ச்சி சார்ந்த பகுதிகளில் தனது பங்களிப்பை அழுத்தமாக பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் அழகாகவும் காட்சியளிக்கிறார்.
வாட்ஸ்அப் மணி வரும் காட்சிகள் சில சிரிப்பை வரவழைக்கின்றன.
துணை நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.
ராஜேஷ் முருகேசனின் இசை காதல் காட்சிகளுக்கு கூடுதல் அழகை சேர்க்கிறது. பாடல்களும் பின்னணி இசையும் கதையின் உணர்வுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க உதவுகின்றன.
முகேஸ்வரன் வி ஒளிப்பதிவு, ராஜஸ்தானின் வண்ணமயமான காட்சிகளையும் ஊட்டியின் இயற்கை அழகையும் ரசிக்க வைக்கிறது.
முதல் பாதி காதல் மற்றும் காட்சியமைப்பால் கவர்ந்தாலும், இரண்டாம் பாதி உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நகர்கிறது.
சில காட்சிகள் முன்னரே பார்த்த அனுபவத்தை தந்தாலும், கதாபாத்திரங்களின் உணர்ச்சி பயணம் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
மொத்தத்தில், காதலை வெறும் பொழுதுபோக்காக அல்லாமல், நினைவுகள் மற்றும் உறவுகளின் மதிப்பை பேசும் படமாக ‘ஹார்ட்டின்’ உருவாகியுள்ளது.
மென்மையான காதல் கதைகளை ரசிக்கும் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
இயக்குநர் கிஷோர் குமார், காதல் கதையை நினைவிழப்பு என்ற உணர்வுபூர்வமான அம்சத்துடன் இணைத்து ரசிகர்களுக்கு மென்மையான திரையரங்கு அனுபவத்தை வழங்கியுள்ளார்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுத்து மற்றும் இயக்கம் : கிஷோர் குமார்
இசை : ராஜேஷ் முருகேசன்
ஒளிப்பதிவு : முகேஸ்வரன் வி
எடிட்டர் : பரத் விக்ரமன்
கலை இயக்குனர் : ஜி. துரைராஜ்
தயாரிப்பு : டிரைடென்ட் ஆர்ட்ஸ் – ஆர்.ரவீந்திரன்
இணைத் தயாரிப்பு: ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
ரேட்டிங் : 3 / 5 ⭐⭐⭐

