மஞ்சளை பேஸ்ட் செய்து கண்களைச் சுற்றி 10 நிமிடம் தடவுவதால் ஏற்படும் நன்மைகள்

நமது சமையலறையில் உள்ள பொருட்களில் மருத்துவ குணம் நிறைந்த ஓர் அற்புத பொருள் தான் மஞ்சள். இந்த மஞ்சளை அன்றாட உணவில் சேர்ப்பதால், ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் இது ஓர் அழகு பராமரிப்பு பொருளாகவும் பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. மஞ்சளை உணவில் சேர்ப்பதால் மட்டுமின்றி, அதனை கண்களைச் சுற்றி தடவுவதன் மூலமும் நன்மைகள் கிடைக்கும். மஞ்சளை பேஸ்ட் செய்து கண்களைச் சுற்றி தடவுவதால் கருவளைம் மறையும். மஞ்சள்தூளை அன்னாசி சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் மாயமாய் மறைவதோடு, கண்களைச் சுற்றி இரத்த ஓட்டம் அதிகரித்து, கண்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

பாலை சூடேற்றி, அத்துடன் ஏலக்காய், பட்டை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பின் அத்துடன் மஞ்சள் தூள், மிளகுத் தூள், தேங்காய் எண்ணெய், தேன் சேர்த்து தொடர்ந்து கிளறி விட்டு இறக்க வேண்டும். பின்பு அதனை வடிகட்டி, கண்களின் மேல் மற்றும் கீழ் பகுதியில் தடவி, 5-8 நிமிடம் நன்கு காய வைத்து, பின் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தலைவலி, வயிற்றுப்போக்கு, சளி, வயிற்றுப்புழு பிரச்சனை, வைரஸ் தொற்றுகள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக தொற்றுக்களை சரிசெய்யும்.

மேலும் மஞ்சளின் நன்மைகள்

மஞ்சள் மூளையின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். மேலும் இது மூளையில் அமிலாய்டு உருவாக்கத்தை நீக்கி, அல்சைமர் நோய் வருவதைத் தடுக்கும்.

மஞ்சள் ப்ரீ-ராடிக்கல்களை நடுநிலைப்படுத்தும் திறன் கொண்டவை மற்றும் உடலினுள் உள்ள செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் இது புற்றுநோயை உருவாக்கத்துடன் தொடர்புடைய நொதிகளைத் தடுக்கவும் செய்யும்.

மஞ்சள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, சீரான அளவில் வைத்துக் கொள்ள உதவும்.

மஞ்சள் பித்தநீர் உற்பத்தியைத் தூண்ட உதவி, வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை போன்வற்றைக் குறைக்கும். அதோடு, மஞ்சள் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் செய்யும்.

மஞ்சளில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், மூட்டு வலிகளில் இருந்து விடுவிக்கும் வலி நிவாரணி போன்று செயல்படும்.