முதல்வர் பழனிசாமியின் சொந்த ஊர் மக்கள் சென்னை வந்து ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான எடப்பாடியை சேர்ந்த அதிமுக ஆதரவாளர்கள், ஊர்கார்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவளித்தனர். ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் கடும் குழப்பமும், கூச்சலும், பிரிவுகளும் உருவாகியுள்ளது. சசிகலாவின் தலைமை ஏற்க மறுத்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனியாக அணி அமைத்து தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறினார். இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் முக்கிய மூத்த தலைவர்களான மசூதனன், பொன்னையன் ஆகியோர் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவளித்தனர். மேலும் 12 எம்பிக்கள், 12 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

இதனையடுத்து, தமிழகம் முழுவதும் சசிகலாவிற்கு ஆதரவாக இருக்கும் எம்எல்ஏ மற்றும் எம்பிகளிடம் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஊர் ஊராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சசிகலலா ஆதரவாளர்களிடம் பேசி வருகின்றனர். மேலும், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், அதனால் சிபிஐ விசாரணையை நடத்த வேண்டும் என்று கோரியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்திக் காட்டினார்கள்.

அதே போன்று சசிகலா ஆதரவாளர்கள் அதிக உள்ள ஊர்களிலும் பெரும் கூட்டத்தை கூட்டி தங்கள் அணியின் பலத்தை ஓபிஎஸ் அணியினர் நிரூப்பித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, சென்னையில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியை சேர்ந்த அதிமுக ஆதரவாளர்கள், ஊர்கார்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் சென்றனர். அங்கு அவரை நேரில் சந்தித்து ஆதவளித்தனர். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக மற்ற மாவட்டங்களில் இருந்து தொடர்ந்து ஆதரவு பெருகி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் மக்களே அவரை கை கழுவி விட்டுவிட்டு ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவளித்திருப்பது எடிப்பாடியரை மிகவும் கவலையடையச் செய்துள்ளது.