ஹர்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் டாக்டர்.கே.பாலகுமரன் தயாரிக்கும் ‘முந்தல்’

ஹர்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் (Harvest Moon Pictures)
டாக்டர்.கே.பாலகுமரன் தயாரிக்கும்
‘முந்தல்’

நடிகர், நடிகைகள்:

கதாநாயகன் – அப்பு கிருஷ்ணா (அறிமுகம்)

கதாநாயகி – முக்‌ஷா

நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், அழகு, மகாநதி சங்கர், போண்டா மணி, வெங்கல் ராவ் ஆகியோருடன் ரிஷா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

இசை – கே.ஜெய்கிருஷ்

ஒளிப்பதிவு – ராஜா

படத்தொகுப்பு – சாய் சுரேஷ்

ஸ்டண்ட் – ஜெயந்த்

நடனம் – ஜாய்மதி

பாடல்கள் – வெ.மதன்குமார், அண்ணாமலை, தர்மபுத்திரன்

மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ்

கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – ஜெயந்த் (அறிமுகம்)

படம் கதை மற்றும் இயக்குநர் பற்றி, சிறு வயதிலேயே சிலம்பம், குங்பு, யோகா உள்ளிட்ட வீர விளையாட்டுகளில் திறமையானவராக விளங்கிய ஜெயந்த், திரையுலகில் ஸ்டண்ட் நடிகராகவும், இயக்குநராகவும் சுமார் 250 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது ‘முந்தல்’ மூலமாக இயக்குநராக அறிமுகமாகியுள்ள ஸ்டண்ட் ஜெயந்த், தனது முதல் படத்தை பிரம்மாண்ட ஆக்‌ஷன் நிறைந்த படமாக எடுத்திருப்பதுடன், புற்று நோய்க்கான விழிப்புணர்வு படமாகவும் இயக்கியிருக்கிறார்.

புற்று நோயை முற்றிலுமாக குணப்படுத்த கூடிய மருந்துகளை நமது முன்னோர்கள் கண்டுபிடித்து விட்டாலும், வியாபார நோக்கில் அதனை சிலர் மறைத்து வைத்துவிட்டனர். அப்படி மறைக்கப்பட்ட ஒரு அபூர்வ மருந்தை தேடி ஹீரோ செல்ல, அதே மருந்துக்காக பலர் பயணிக்க இறுதியில் அந்த மருந்து யாரிடம் கிடைக்கிறது? என்பது தான் படத்தின் கதை.

படத்தில் இடம்பெறும் காட்சிகள் பெரும்பாலும் பயணம் சம்மந்தமான காட்சிகள் என்பதால் 40 க்கும் மேற்பட்ட லொக்கேஷன்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதேபோல கப்பல், விமானம், ரயில் என்று அனைத்திலும் கதை பயணிக்கிறது.

இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்த் மீனவர் என்பதால், கடலை பற்றி நன்கு அறிந்தவர் என்பதால், பெரிய ஆபத்தான கடல் காட்சிகளையும் ரொம்ப இயல்பாக படமாக்கியுள்ளார். கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதியில் படமாக்கப்பட்ட இப்படத்தின் காட்சிகள் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கும். படத்தில் மட்டுமல்ல, படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையான மீன் உணவை வழங்கி அசத்திவிட்டாராம் ஜெயந்த்.

இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள நான் கடவுள் ராஜேந்திரன், ஸ்டண்ட் கலைஞர் என்பதால், ஜெயந்த் உடனான நட்பின் மூலம் இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் எந்தவிதமான டூப்பும் போடாமல், ரிஸ்க் எடுத்து நடித்துக் கொடுத்துள்ளார். ஹீரோவும் பல ரிஸ்கான காட்சிகளில் நடித்து அனைவரிடமும் பாராட்டு பெற்றுள்ளார்.

தங்களது உயிரை பணையவைத்து மற்றவங்களை வாழ்க்கையில் உயர்த்திவிடும் ஸ்டண்ட் கலைஞர்களின் வாழ்க்கையை நன்கு உணர்ந்த ஸ்டண்ட் ஜெயந்த், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை படமாகியிருக்கிறார்.

இந்த உலகத்தையே ஒருவன் தனக்கு ஆதாயமாக்கிக் கொண்டாலும், அவன் இறந்த பிறகு அவனது ஆன்மா அடையும் பயன்கள் என்ன? உள்ளிட்ட ஆன்மீக் தகவல்களைக் கொண்ட இப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.