துடிப்பான இளைஞனாக ஹரிஷ் கல்யாண் நடிக்கும் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்”

காதல் கதைகளுக்கு, துடிப்பான இளம் கதாநாயகனை தேடிக்கொண்டிருக்கும் இளம் இயக்குநர்களுக்கு ஹரிஷ் கல்யாண் ஒரு பொக்கிஷமாக இருக்கிறார்.  “பியாா் பிரேமா காதல்” படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, 15-ந் தேதி  வெளிவர இருக்கும் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” திரைப்படம் வர்த்தகரீதியாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“இந்த படம் காதலை பற்றியும், புரிதலை பற்றிய படம் இன்றைய தலைமுறைக்கு மிகவும் பிடித்தமான கதையாக இருக்கும். இந்தப் படத்தில் இடம்பெறும் சில சம்பவங்கள் எல்லாருடைய வாழ்விலும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நடந்திருக்கும் அல்லது  கேள்விபட்டாவது இருப்பார்கள்.  இந்த கதையின் நாயகியும், நாயகனும் உங்களில் ஒருவராக இருக்கலாம். 
இந்தப் படத்தின் வெற்றிக்கு இசை ஒரு பெரிய காரணமாக இருக்கும். ‘கண்ணம்மா’ பாடலுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு, எங்களை பெரிதும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள்து.  ஒளிப்பதிவாளர் கவின், இந்த படத்தில் வண்ணங்களை எண்ணத்தில் கலந்து  ஒளிப்பதிவு  செய்திருக்கிறார்.  இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கதை சொன்ன தருணமே இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் என்று அறிந்தே தேர்வு செய்தேன். அதில் ஓர் அளவுக்கு வெற்றியும் பெற்று இருக்கிறேன் என நம்புகிறேன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எனக்கொரு நிரந்தரமான இடம் பெற்று தரும் என நம்புகிறேன். கதாநாயகி ஷில்பா மிகவும் உன்னதமான  நடிகையாவார்.  அவருடன் இணைந்து பணிபுரிந்தது எனக்கு பெருமையே, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திரு. பாலாஜி கப்பாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ்  காட்சிகள் பல வருடங்களுக்கு பேசப்படும். காதலுக்கு மரியாதை தரும் படம் என்றால்  மிகையாகாது. இந்தப் படம் நிச்சயமாக யாரையும் புண்படுத்தாது. 
இந்தப் படத்தில் பெண்கள் ஆண்களை சார்ந்து இல்லை என வலியுறுத்துகிறோம். இந்த உண்மையை நாங்கள் பிரச்சாரமாக  சொல்லவில்லை ஆனால் ஆழமாக சொல்கின்றோம்.  என்னுடைய கதாபாத்திரமான கௌதம் எல்லா இளைஞர்களையும் கவரும்.  இந்தப் படத்தின் கதாநாயகன் கௌதம் லே, லடக் ஆகிய இடங்களுக்கு தன்னை இனம் கண்டு கொள்ள செல்கிறான். இந்த காட்சி ரசிகர்களை மிகமிக கவரும் என்பதில் சந்தேகம் இல்லை” என ஹரிஷ் கல்யாண் கூறுகிறார்.