சென்னையில் ஒரே நேரத்தில் அதிக நபர்கள் சன்ஸ்கிரீன் பயன்படுத்தி  கின்னஸ் உலக சாதனை

 
சென்னையை தலைமையிடமாக கொண்டு, ஹெல்த் & வெல்னஸ் துறையில், ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது வீகேர் குழுமம். இந்நிறுவனம், இந்தியாவில் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் தனது முத்திரையை பதித்துள்ளது. தலைமுடி சிகிச்சை, சரும சிகிச்சை, அழகு சாதன பொருட்கள் வணிகம், முடி பரிசோதனை, போஷாக்கு பொருட்கள், ஆராய்ச்சி மற்றும்  உருவாக்கம், உற்பத்தி, கல்வி மற்றும் பயிற்சி போன்ற துறைகளில் இந்நிறுவனம் சாதனை படைத்து வருகிறது. 
 
திருமதி இ.கரோலின் பிரபா அவர்கள் இந்நிறுவனத்தின் தலைவராவார். இவர் இன்டர்னேஷனல் அசோசியேசன் ஆஃப் ட்ரைக்காலஜிஸ்ட்ஸ் ஆஸ்திரேலியா மற்றும் வேர்ல்ட் ட்ரைக்காலஜிஸ்ட் சொசைட்டி, அமெரிக்கா போன்ற பயிற்சி நிறுவனங்களில் இருந்து ட்ரைக்காலஜி பட்டம் பெற்றுள்ளார். இது மட்டுமின்றி, அவர் ஒரு அங்கீகாரம் பெற்ற அழகுக்கலை நிபுணர் ஆவார். கிரீன் பீல், ஐபுரோ எம்ப்ராயிடரீங், போன்ற துறைகளில் வெளிநாடுகளில் பயிற்சி பெற்றுள்ளார்.
 
வீகேர் புரோபஷனல்ஸ், வீகேர் குழுமத்தின் ஒரு அங்கமாகும். இந்நிறுவனம், ப்யூட்டி பார்லர், சலூன், ஸ்பா மற்றும் ஸ்கின் க்ளினிக்குகளுக்கு தேவையான அழகு சாதன பொருட்கள் மற்றும் உபகரணங்களை இந்தியா முழுவதும் சந்தைப்படுத்தி வருகின்றது. 
 
வீகேர் நிறுவனத்தின் தலைவர் திருமதி. இ.கரோலின் பிரபா அவர்கள் மற்றும் வீகேர் புரொபஷனல்ஸ் நிறுவனம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சியை, ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதியான இன்று, சென்னை வர்த்தக மையத்தில் நடத்தி காண்பிக்கப்பட்டது. ஒரே இடத்தில் நடைபெறும் மிகப்பெரிய சரும பராமரிப்பிற்கான பயிற்சி வகுப்பு (Largest Skin Care Lesson (Single Venue) ) மற்றும் ஒரே நேரத்தில் அதிக நபர்கள் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது (Most People Applying Sunscreen Simultaneously) ஆகிய துறைகளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றதுடன், முந்தைய சாதனை மிகப்பெரிய வித்தியாசத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது.
 
முந்தைய உலக சாதனை ஒரே நேரத்தில் அதிக நபர்கள் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது (Most People Applying Sunscreen Simultaneously) அமெரிக்காவில் 1822 நபர்கள் கலந்து கொண்டு நிகழ்த்தினர்.
 
சென்னையில் இந்த கின்னஸ் உலக சாதனை வெற்றிகரமாக  நிகழ்த்தப்பட்டது. 2441 நபர்கள் கலந்து கொண்டு 03:29.89( மூன்று நிமிடம் 29.89 நொடிகள்) புதிய உலக சாதனையை நிகழ்த்தி உள்ளார்கள்.
 
 இந்த முயற்சியின்போது கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் மேற்பார்வையாளர் நிகழ்ச்சியை மேற்பார்வையிட்டார். 
 
ஆல் இந்தியா ஹேர் மற்றும்  ப்யூட்டி அசோசியேஷனின் உதவி மற்றும் பெறும் பங்களிப்போடு இந்த உலக சாதனை முயற்சி நடைபெற்றது. இந்த சங்கத்தின் அகில இந்திய தலைவர் மற்றும் பல்வேறு மாநில தலைவர்கள் இந்த சாதனை முயற்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 
 
வீகேர் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு முயற்சிகளின் (CSI) ஒரு பகுதியாக, பங்கு பெரும் அனைவருக்கும் விதைப்பந்துகள் வழங்கப்பட்டன.