ஜூன் 30ஆம் தேதி ஜி.எஸ்.டி. தொடக்க விழா பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாகவும், அதில் மன்மோகன் சிங், தேவ கௌடா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதகவும் நிதிமந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி கூறுகையில், ஜி.எஸ்.டி. தொடக்க விழா பாராளுமன்றத்தின் மத்திய ஹாலில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில நிதி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விழா மேடையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் மற்றும் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் தேவ கௌடா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். ஜி.எஸ்.டி. மசோதா ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று நாங்கள் தெரிவித்து வருகிறோம். யாருக்காகவும் தயாராக இருக்க வேண்டியதில்லை என்று கூறினார்.