திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ். அணிகள் தனியாக இருந்தபோது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் கூறுகையில், ஓ.பி.எஸ்.வலியுறுத்திய போது ஆளுநர் சட்டமன்றத்தை கூட்டினார். அப்போது அவருக்கு தெரியாதா இது உட்கட்சி விவகாரம் என்று.
சட்டமன்றத்தை கூட்ட திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் சட்டப்படி ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் சொல்லும் ஆளுநர் அதிமுக விவகாரத்தில் அரசியல் செய்வதாகவே கருதுகிறேன். இது குறித்து நாளை தமிழக விவகாரம் குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.