உலக வெப்பமயமாதல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்

[wpdevart_youtube]bQKiZzGFXpM[/wpdevart_youtube]

உலக வெப்பமயமாதல் காரணமாக கடல் உயர்மட்டம் உயர்வால் சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக கடற்கரை வள மையம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீனவ சங்க பிரதிநிதி சரவணன் உலக வெப்பமயமாதல் அதிக அளவில் இருப்பதால் கடல் மட்டத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கடற்கரையோரமாக உள்ள 3029 சதுர கிமீ பரப்பளவு பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக கடற்கரை வள மையம் தெரிவித்துள்ளதாகவும் , இதன் காரணமாக 2000 கிமீ பயன்படுத்த முடியாத இடங்களாக மாற வாய்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இதில் தொடர்பான பல்வேறு ஆதாரப்பூர்வ அறிக்கைகளை மத்திய மாநில அரசுகளிடம் சமர்ப்பித்தும் இதுவரை அதுக் குறித்த அறிவிப்பை பொதுமக்களிடம் எடுத்துக் கூறாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.