வன்முறைகளில் இருந்து விடுபடவேண்டும் – பிரணாப் முகர்ஜி

Karthi Subbaraj Iravi

இந்திய திருநாட்டின் 13வது குடியரசு தலைவராக பதவி வகித்த பிரணாப் முகர்ஜி ஓய்வு பெறுவதையொட்டி தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் நாட்டிற்காக கடமையாற்றியுள்ளதை நினைத்து பெருமை அடைகிறேன். அனைத்து விதமான வன்முறைகளில் இருந்தும் நாம் கண்டிப்பாக விடுபட வேண்டும். எனது பதவிக்காலத்தில் ஒவ்வொரு நாளும் நாட்டுக்காகவே கடமையாற்றியுள்ளேன்.

கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றுக் கொண்டேன். கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் மொழி ஆகியவற்றின் பெருக்கம்தான் இந்தியாவின் சிறப்பு சகிப்புத்தன்மையில் இருந்து நமது பலத்தை பெறுகிறோம். இது நூற்றாண்டுகளாக நமது கூட்டு உணர்வின் ஒரு பகுதியாகும். கல்வியின் உருமாற்ற சக்தியின் மூலம் சமூகத்தை மறுசீரமைப்பது சாத்தியமாகும். எனது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் நாங்கள் ஒரு மனிதாபிமான மற்றும் மகிழ்ச்சியான நகரத்தை உருவாக்க முயற்சித்தோம்.

ஏழை மக்களின் வளா்ச்சிக்காக நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அனைத்து விதமான வன்முறைகளில் இருந்தும் நாம் கண்டிப்பாக விடுபட வேண்டும் என்று கூறினார். முன்னதாக பிரணாப் முகர்ஜிக்கு அளிக்கப்பட்ட பிரிவு உபசார நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன்சிங், தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.