ஓய்வுக்குப் பிறகான திட்டமிடல் – ஜியோஜித்

 

முன்னணி முதலீட்டுச் சேவை நிறுவனமான ஜியோஜித் ஃபைனான்ஷியல் சர்வீஸ், இன்று (ஏப்ரல் 6) தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு நிதி முதலீடு தொடர்பான சேவையைத் திட்டமிட, செயல்படுத்த மற்றும் கண்காணிக்க ப்ரீமியம் ஆன்லைன் பிளாட்ஃபார்மை அறிமுகம் செய்தது. இதை ஹெச்.டி.எஃப்.சி அசட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மிலிந்த் பார்வீ தொடங்கிவைத்தார். ஜியோஜித் இயக்குநர்கள் குழுவின் தலைவர் ஏ.பி.குரியன், ஜியோஜித் இயக்குநர் குழுவின் இண்டிபெண்டன்ட் இயக்குநர் ஆர்.பூபதி, ஜியோஜித் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சதீஷ் மேனன் மற்றும் ஜியோஜித் முதலீட்டு ஆலோசனை சேவைகள் பிரிவின் தலைவர் ஜீவன் குமார் கே.சி ஆகியோர் முன்னிலையில் இந்த அறிமுக விழா நடந்தது.

வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சௌகரியமான இந்தத் தளமானது, ஜியோஜித் ஆன்லைன் ஃபினான்ஷியல் பிளானிங் எனப்படும். இது வாடிக்கையாளருக்கு, ஓய்வுக்குப் பிறகான பாதுகாப்பு உள்பட நிதி திட்டமிடல் தொடர்பான அனைத்துத் தேவைகளையும் முழுமையான அளவில் இந்த ஒரே தளத்தில் பெற முடியும். இந்தத் தளத்தை, ஜியோஜித் டெக்னாலஜிஸ் லிமிடெட் உருவாக்கிக்கொடுத்துள்ளது. இதை www.geojit.com என்ற இணையத் தளத்துக்கு வருகை தருவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தப் புதிய தளம் அறிமுகம் குறித்து மிலிந்த் பார்வி அவர்கள் பேசுகையில், “கையிருப்பில் இருந்து வங்கி போன்ற நிதி சேவை அளிக்கும் நிறுவனத்துக்கு என, இந்தியாவின் நிதி சேமிப்பின் கட்டமைப்பிலேயே மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். நிதி சேவை நிறுவனங்களில் சேமிப்பு என்பதும்கூட, இன்றைக்குச் சந்தைக்குத் தொடர்புடைய முதலீடாக, அதாவது மியூட்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடாக மாறியிருக்கிறது. இந்தப் போக்கு உண்மையில் பாராட்டத்தக்கது. இதை ஊக்குவிக்க வேண்டியது மிக முக்கியமானது. இதற்காக, பணி ஓய்வுக்குப் பிறகான திட்டமிடல், குழந்தைகளின் படிப்புக்கான திட்டமிடல் உள்ளிட்ட இலக்கை நோக்கிய முதலீடாக இருக்க ஊக்குவிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.  இதுமாதிரியான முதலீடு என்பது இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. மேலும், இந்தியா டிஜிட்டல் புரட்சியில் மையத்தில் இருக்கிறது. இதன் அடிப்படையில், வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் எதிர்காலம் சிறப்பானதாக இருக்க, நிதி முதலீட்டில் அவர்களைச் சரியான பாதையில் அழைத்துச் செல்ல, அவர்களுக்குச் சரியானதை வழிகாட்ட ஜியோஜித், ஆன்லைன் ஃபைனான்ஷியல் பிளானிங் டூலை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் சிறப்பான முன்முயற்சியை மேற்கொண்ட ஜியோஜித் குழுவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

ஏ.பி.குரியன் அவர்கள் பேசுகையில், முதலீட்டாளர்களுக்கு மாறிவரும் அதிகரித்துவரும் தேவையைக் கருத்தில் கொண்டு நீடித்த நிலையான முன்னெடுப்புக்களை ஜியோஜித் மேற்கொண்டு வருவதன் ஒரு பகுதியாகத்தான் இன்றைக்கு முதலீட்டாளர்களுக்கான தனித்தன்மை வாய்ந்த ஃபைனான்ஷியல் பிளானிங் டூலை அறிமுகம் செய்திருக்கிறோம். இந்த டூல் மூலமாக முதலீட்டாளர்கள், தங்களுடைய முதலீட்டுத் திட்டத்தைக் கண்காணித்து, தங்களுடைய குடும்பத்துக்கு அல்லது தங்களது தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும். இன்றைக்கு, பல வகையான முதலீட்டு வழிகள் நமக்குக் கிடைக்கின்றன. இவை அனைத்தையும் ஒரே தளத்தில் இருந்து கண்காணிப்பதன் மூலம் முதலீட்டாளர் தன்னுடைய இலக்கை அடைய உதவியாக இருக்கும். இந்த மிகவும் பயனுள்ள தளத்தை, முதலீட்டாளர்கள் அனைவரும் பயன்படுத்தி, மிகப்பெரிய பயனை அடைவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

சதீஷ் மேனன் அவர்கள் கூறுகையில், “ஜியோஜித் இந்தப் பிளாட்ஃபார்மை வடிவமைப்பது, பரிசோதிப்பது, செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது என அனைத்தையும் மேற்கொண்டிருக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் இந்த அனைத்தும் ஒருங்கிணைந்த, உபயோகிக்க மிகவும் எளிமையான இந்தத் தளத்தைப் பயன்படுத்தி மிகப்பெரிய பயனை அடைவார்கள் என்று நம்புகிறேன்” என்றார். இந்த ஆன்லைன் ஃபைனான்ஷியல் பிளானிங் சர்வீஸானது, தனிநபர் ஒருவரைப்பற்றித் தெரிந்துகொள்ளவும், ரிஸ்க் டாலரன்ஸ் லெவலைத் தெரிந்துகொள்ளவும் உதவுகிறது. இது, முதலீட்டாளரின் வருவாய், செலவு, சொத்து மற்றும் பொறுப்புக்கள் உள்ளிட்ட தகவலை பெறவும் அதைக்கொண்டு ஆய்வு செய்யவும் உதவும். மேலும், முதலீட்டாளர் தன்னுடைய வாழ்க்கை இலக்கை வரையறை செய்யவும் உதவுகிறது.

பணி ஓய்வுக்குப் பிறகான திட்டமிடுதலுக்கு என்று பிரத்தியேகமான திட்டம் இதில் உள்ளது. மிக விரிவான திட்டத்தைத் தயாரிப்பதன் மூலம், வாடிக்கையாளருக்கு அவருடைய நிதி நிலை மற்றும் நிதி இலக்கை அடைவதற்கான வழியைப் பற்றி ஓர் தெளிவான படத்தை அவர்களுக்குக் காட்டும். சாதகமான ரிட்டர்ன்ஸ் வருவதைச் சாதிக்கும் நோக்கிலான, ப்ரொஃபைல்டு இன்வெஸ்ட்மென்ட் டூல், வாடிக்கையாளர்களுக்குக் கடல் போலப் பரந்து விரிந்து காணப்படும் நிதி தொடர்பான வாய்ப்புகளில் எது சரியானது என்று தேர்வு செய்யவும், மிகக் கவனமாக ரிஸ்க் ப்ரொஃபைலை கணிக்கவும் உதவுகிறது. இந்தச் சேவையானது, ஃபைனான்ஷியல் பிளானிங்குக்குப் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அளிக்கப்படும்.

ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரி சேவைக்குள்ளாக, எஸ்டேட் பிளானிங் சர்வீஸ், எஸ்.எல்.டி.எல் உடன் இணைந்து அளிக்கப்படும் இ-கவர்னென்ஸ் இன்ஸ்ஃப்ராஸ்டிரக்சர் லிமிடட் ஆகியவையும் அளிக்கப்படும். ஜியோஜித் ஆன்லைன் ஃபைனான்ஷியல் பிளானிங் சேவை பெற, ரூ.1999 செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு ரூ.999க்குப் புதுப்பித்துக்கொள்ளலாம். அறிமுகச் சலுகையாக முதல் மூன்று மாதங்களுக்கு 50 சதவிகித தள்ளுபடியில் இந்தச் சேவையைப் பெறலாம்.

ஜியோஜித் பற்றிய சிறுகுறிப்பு

ஜியோஜித் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் (www.geojit.com) என்பது முன்னணி நிதி தொடர்பான சேவையை அளிக்கும் தரகு நிறுவனம் ஆகும். இதற்கு, 30 ஆண்டுகளுக்கும் மேலான இந்திய நிதிச்சந்தையில் அனுபவமும் வளைகுடா நாடுகளில் மிக வலிமையான செயல்பாடும் உள்ளது. இந்த நிறுவனம் தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் மும்பாய் பங்கு வர்த்தகம் (BSE)யில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு 8,50,000 வாடிக்கையாளர்கள் மற்றும் 551க்கும் மேற்பட்ட நெட்வொர்க் அலுவலகங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் கீழ் 29,000 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது. சி.ஜெ.ஜார்ஜ் இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். KSIDC மற்றும் ராகேஷ் ஜுன்ஜுவாலா ஆகியோர் இந்த நிறுவனத்தின் மதிப்புமிக்கப் பங்குதாரர்கள் ஆவர்.

ஜியோஜித் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் தன்னுடைய இருப்பை மத்திய கிழக்கிலும், ஜாயிண்ட் வென்ச்சர் மற்றும் பார்ட்னர்ஷிப் அடிப்படையில் விரிவுபடுத்தியுள்ளது. பார்ஜில் ஜியோஜித் செக்யூரிட்டிஸ் என்பது, அல் சாத் குழுமத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட நிறுவனம் ஆகும். இதன் தலைமையிடம் ஐக்கிய அரபு எமிரேட்டின் துபாயில் அமைந்துள்ளது. இதற்கு, அபுதாபி, அல் அனின் மற்றும் ஷார்ஜாவில் கிளைகள் உள்ளன. அலுலா ஜியோஜித் கேப்பிட்டல் நிறுவனம் என்பது, அல் ஜோர் குழுமத்துடன் இணைந்து தொடங்கப்பட்டதாகும். இதன் தலைமையகம் சௌதி அரேபியாவின் ரியாத்தில் அமைந்துள்ளது. தமாமில் இதன் கிளை அமைந்துள்ளது. பி.பி.கே ஜியோஜித் செக்யூரிட்டிஸ் கே.எஸ்.சி என்பது குவைத்தில் அமைந்திருக்கிறது. இது, பேங்க் ஆஃப் பஹ்ரைன் அன்ட் குவைத் மற்றும் ஜெ.இசெட்.ஏ-வுடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது. க்யூ.பி.ஜி ஜியோஜித் ஃபைனான்ஷியல் சர்வீஸ் எல்.எல்.சி என்பது, க்யுரோம் பிசினஸ் குரூப் மற்றும் நேஷனல் செக்யூரிட்டிஸ் கம்பெனியுடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது. இது, ஓமனில் இருந்து செயல்படுகிறது. இதுதவிர, பஹ்ரைன் மற்றும் குவைத் வங்கியுடன் கூட்டுறவு மேற்கொண்டு பஹ்ரைனிலும் தன்னுடைய இருப்பை வைத்துள்ளது.

ஜியோஜித் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் (ஜ.எல்.டி) என்பது, எஸ்.இ.ஐ சி.எம்.எம்.ஐ லெவல் 5 மென்பொருள் தீர்வு அளிக்கும் நிறுவனம் ஆகும். இது, கான்செப்ஷுவலைசிங், வடிவமைப்பு மற்றும் செயல்படுத்துதல் என என்ட் டூ என்ட் தொழில் தீர்வுகளை அளிக்கிறது.