ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் – திரைவிமர்சனம்

ஜெமினிகணேஷனின் தீவிர ரசிகர் அதர்வாவின் அப்பா என்பதால், தனது மகனுக்கு ஜெமினிகணேஷன் என்றே பெயர் வைக்கிறார். அதர்வாவுக்கு, ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக மதுரையில் இருக்கும் ரெஜினாவிடம் தனது திருமணவிழா அழைப்பிதழை கொடுப்பதற்காக அதர்வா மதுரைக்கு செல்கிறார். ரெஜினினாவின் வீட்டிற்கு சென்ற அதர்வாவுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ரெஜினா அங்கு இல்லை. ரெஜினாவின் வீடு யாரும் பயன்படுத்தாததால் குப்பையாக கிடக்கிறது. 

இதையடுத்து அந்த வீட்டின் மாடியில் இருக்கும் சூரியிடம், ரெஜினா குறித்து அதர்வா கேட்கிறார். சூரி ஊர் முழுவதும் கடன் வாங்கிவிட்டு, தலைமறைவாக அங்கு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அங்கு வரும் அதர்வாவை வைத்து அன்றைய நாளை ஓட்டி விடலாம் என்று திட்டம் போடும் சூரி, அதர்வாவை ரெஜினா வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

போகும் வழியில், ரெஜினாவை எப்படி தெரியும் என்று சூரி கேட்க, ரெஜினா தனது முன்னாள் காதலி என்று அதர்வா கூறுகிறார். மேலும் ரெஜினாவுடனான காதல் குறித்த முழு விவரத்தையும் சொல்கிறார். இந்நிலையில், தனது மற்ற காதல் பற்றியும், காதலிகள் பற்றியும் கூற, தலையை பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு கடுப்பாகும் சூரி என்ன செய்கிறார்? அதர்வா தனது முன்னாள் காதலிகளான  ரெஜினா, அதிதி, பிரணிதா உள்ளிட்டாரை சந்தித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

 இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்