காமி (Gaami) தெலுங்கு பட விமர்சனம்

கார்த்திக் குல்ட் கிரியேஷன்ஸ், வி செல்லுலாய்டு, விஆர் குளோபல் மீடியா, ஸ்வேதா வாஹினி ஸ்டுடியோஸ் லிமிடெட், க்ளோன் பிக்சர்ஸ் சார்பில், கார்த்திக் சபரீஷ் தயாரிப்பில், வித்யாதர் ககிதா இயக்கத்தில், விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, ஹரிகா பெத்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் காமி.

நாயகன் விஷ்வக் சென் காசியில் சுற்றித் திரிகிறார். அவரின் உடல் மீது மனிதர்களின் கை லேசாக பட்டால் கூட அவருக்கு கரண்ட் தாக்கியது போன்ற உணர்வு ஏற்படுகிறது அது மட்டும் இல்லாமல் சில மணி நேரங்கள் எந்த உணர்வும் இல்லாமல் மயங்கி விழுந்து விடுகிறார்.

இது எதனால் ஏற்படுகிறது இதிலிருந்து வெளிவர மருத்துவர் ஒருவரை பார்க்கிறார் அந்த மருத்துவர் இப்படிப்பட்ட பாதிப்பை சரி செய்ய மருந்து தன்னிடம் இல்லை என்றும் அதற்கான மற்றொரு வழியையும் சொல்கிறார் இந்த பிரச்சினையை சரி செய்யக்கூடிய அரியவகை காலன் ஒன்று இமயமலை பகுதியில் இருக்கிறது. 36 வருடங்களுக்கு ஒரு முறை தான் அந்த காளான் வளரும் வளர்ந்த 24 மணி நேரத்தில் அழிந்துவிடும் என்றும் சொல்கிறார்

 

 

 

 

அந்த காளானை எடுத்து உடம்பில் தேய்த்தால் இந்த பிரச்சனை சரியாகும் என்று கூறுகிறார். அதற்காக அந்த காலானை தேடி செல்கிறார் விஷ்வக் சென்

இது ஒரு புறம் இருக்க அந்த அதிசய காளான் குறித்து சாந்தினி சவுத்ரி ஆராய்ச்சி மேற்கொள்ள இவரும் இமயமலை பயணிக்கிறார்.

ஆபத்துக்கள் பல நிறைந்த இமயமலை பகுதிக்கு பலவித சிரமங்களை எதிர்கொண்டு செல்கிறார்கள். நாயகன் விஷ்வக் சென்னும், சாந்தினி சௌத்ரியும்.

இப்படி பயணம் மேற்கொள்ளும் சமயத்தில் விஷ்வக் சென்னின் நினைவில் சிறுவன் ஒருவனும் சிறுமி ஒருவரும் அடிக்கடி வந்து தன்னை காப்பாற்றுமாறு சொல்கிறார்கள்.

தன்னுடைய நினைவில் வரும் இவர்கள் யார் என்ற குழப்பத்துடன் பயணிக்கும் விஷ்வக் சென் அந்த அதிசய காளனை கண்டுபிடித்து கைப்பற்றினாரா? இல்லையா? அவருடைய பிரச்சனை சரி செய்யப்பட்டதா? இல்லையா? என்பதே காமி படத்தோட மீதி கதை

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : வித்யாதர் ககிதா

திரைக்கதை :  வித்யாதர் காகிதா பிரத்யுஷ் வாத்யம் 

ஒளிப்பதிவு : விஸ்வாந்த் ரெட்டி செலுமல்லா 

இசை (பாடல்கள்) :  ஸ்வீகர் அகஸ்தி பின்னணி 

இசை : நரேஷ் குமரன் 

படத்தொகுப்பு : ராகவேந்திர திருன்

தயாரிப்பு நிறுவனம் : கார்த்திக் கல்ட் கிரியேஷன்ஸ், வி செல்லுலாய்ட்,வி ஆர் குளோபல் மீடியா, ஸ்வேதா வாகினி ஸ்டுடியோஸ் லிமிடெட், கிளவுட் பிக்சர்ஸ் 

தயாரிப்பாளர் :கார்த்திக் சபரீஷ்