கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் மற்றும் இந்திய கலாச்சார நட்புறவு கழகம்; சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் முத்து செல்வம் தலைமை வகித்தார். கிருஷ்ணன் கோவில் சங்கரா கண்மருத்துவமனை மருத்துவர் பூமாரி தலைமையிலான குழுவினர் 2000க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பரிசோதனை செய்தனர். கண்எரிச்சல், பார்வை குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் மேரி, இந்திய கலாச்சார நட்புறவு கழகம்; மாநில செயலாளர் தமிழரசன், முகாம் ஒருங்கிணைப்பாளர் முனிஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.