சென்னை, 22 ஆகஸ்ட் 2026: ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3233-ஐ சேர்ந்த சென்னை ரேடியன்ஸ் ரோட்டரி சங்கம், தனது முதன்மை நிகழ்வான ரேடியன்ஸ் பிரீமியர் லீக் (RPL) சீசன் 3-ஐ நடத்தியது
ரோட்டரி மாவட்டங்கள் 3233 மற்றும் 3234-ஐ சேர்ந்த சுமார் 60 ரோட்டரி சங்கங்களைச் சேர்ந்த 128 ரோட்டேரியன்கள் இந்த பேட்மிண்டன் திருவிழாவில் பங்கேற்றனர்.
8 அணிகளாக பிரிந்து சென்னை கொரட்டூரில் உள்ள ஸ்மாஷ் போன்ஸ் மைதானத்தில் போட்டிகள் நடைப்பெற்றது.
ஒவ்வொரு ஸ்மாஷும் ஒரு கனவை உருவாக்கும்
இந்த ஆண்டு RPL சீசன் 3 குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான செலவுகள் போக மீதமுள்ள நிதி, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு உயிர் காக்கும் மருத்துவக் கருவி வழங்கப்படும்.
நட்புறவையும் விளையாட்டையும் சமூக சேவையுடன் இணைக்கும் ரோட்டரியின் நோக்கத்தை இந்த தொடர் பிரதிபலிக்கிறது.
இந்த போட்டி தலைவர் Rtn. S. புருஷோத்தமன், செயலாளர் Rtn. லக்ஷ்மிகுமார், மற்றும் RPL சீசன் 3 தலைவர் Rtn. Dr. யேஷ்வந்த் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது
இந்த சிறுவர்களுக்கான கேன்சர் மருத்துவமனைக்கு நிதி திரட்டும் மூன்றாம் ஆண்டு இறகு பந்து போட்டி அம்பத்தூர் தொகுதி கொரட்டூரில் நடைபெற்றது. திரைப்பட நடிகர் கலையரசன், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். 25 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடைபெறும் இறகு பந்து போட்டியில் 130 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்து போட்டி தொடர் மூலமாக திரட்டப்படும் நிதியினை சிறுவர்களுக்கான கேன்சர் மருத்துவமனைக்கு உபகரணங்களை வாங்கி வழங்கப்படுகிறது.
பிறகு பந்து போட்டியை தொடங்கி வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திரைப்பட நடிகர் கலையரசன், நம்முடைய மனநிலையை சீராக ஆரோக்கியமாகவும் வைத்திருக்க விளையாட்டு போட்டிகள் உதவியாக உள்ளது. தற்போதுள்ள அரசு விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குறிப்பிட்ட விளையாட்டுப் போட்டி என்று இல்லாமல் ஏதாவது ஒரு விளையாட்டு போட்டியாவது தொடர்ந்து விளையாடி பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். விளையாட்டு போட்டி மட்டுமே சுயநலம் இல்லாமல் உள்ளது. நாமும் சுயநலமில்லாமல் விளையாட வேண்டும். சார்பட்டா இரண்டாம் பாகம் செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கான வேலைகள் சென்று கொண்டிருக்கிறது.
முதல் பாகத்தில் நடித்த அதே குழுவினர் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார்கள். சார்பட்டா படத்தில் ஆர்யாவிற்கு கற்றுக்கொடுத்தேன். நான் அந்த போதை பழக்கத்தில் இருந்து வெளியேறி விடுவேன் ஆனால் ஆர்யா அதற்கு அடிமையாகி விடுவார். எந்த பழக்கமாக இருந்தாலும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். தற்போதைய அரசியலை பொறுத்தவரை மக்களுக்காக என்ன போராட்டம் நடத்தினீர்கள் என கேட்கின்றனர். நல்லது செய்ய மனது இருந்தால் போதும் அதுதான் நம்மை வழிநடத்தி வரும். அரசு தற்போது வரை மக்களுக்கு செய்து வருகின்றனர்.
நல்லது நடந்து வருவது தொடர்பாகவும் நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் போகப் போக அது குறித்து நமக்கு தெரிய வரும். தற்போது தமிழ்நாட்டில் நிறைய மாற்றங்கள் வருகிறது. மாற்றங்களை நாமும் பார்த்து வருகிறோம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறினார்.


