விவேக்கை அரசியலில் கோர்த்து விடும் விஷால், கார்த்தி, சிம்பு

விவேக்கை அரசியலில் கோர்த்து விடும் விஷால், கார்த்தி, சிம்பு

சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’.  தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள்.  
விழாவில் தேவயானி பேசியதாவது, ‘படத்தில் சிறுவர்கள் அனைவரும் கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். விவேக் மிக அருமையாக நடித்திருக்கிறார். வருகை தந்துள்ள விஷால், கார்த்தி, சிம்புவிற்கு நன்றி. படக்குழுவினருக்கு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார்.
நடிகர் உதயா பேசும்போது, ‘விவேக் அரசியலுக்கு வரவேண்டும். நல்லது பண்ண நினைக்கிறவங்க கண்டிப்பாக அரசியலுக்கு வரணும். விவேக் நல்ல விஷயம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர். அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வெற்றி பெற வேண்டும்’ என்றார். 
விவேக் பேசும்போது, ‘எனக்கு நல்லது செய்யணும்னு விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோரை கூப்பிட்டேன். ஆனா எல்லாரும் சேர்ந்து என்ன அரசியல்ல கோர்த்து விடுறாங்க. தமிழ்நாட்டுல கொடி தான் பிரச்சினை. பலபேர் கொள்கை இல்லாம இருக்காங்க. எழுமின் வார்த்தை சைனீஷ் மாதிரி இருக்குனு சொல்றாங்க. சிலர் “ஏழுமீன்”னு படிக்கிறாங்க. தமிழ் வார்த்தை கூட தெரியாம இருக்காங்க. சமூகத்தில் விளையாட்டுல திறமை இருந்தும் முன்னேறி வர முடியாம இருக்காங்க. அவங்களுக்கு இந்த படம் சமர்ப்பணம். விஷாலுக்கு பல பிரச்சினை இருக்கு.
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பல பிரச்சினைக்கு மத்தில வந்திருக்காரு. நடிகர் சங்கம் கட்டிடத்திற்கு விஷால், கார்த்தி ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கிறாங்க. இந்த ட்ரெய்லர் லாஞ்ச்க்கு இப்போ ட்ரெண்ட்ல இருக்க 3 பேர் வந்திருக்காங்க. எனக்காக வந்த எல்லாருக்கும் நன்றி. அப்போ இருந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கும், என் படத்துக்கும் பல பிரச்சினை வந்தது, ஆனால் இனி அது இருக்காது. விஷால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு முறைப்படுத்தி வருகிறார்.” என்றார்.