நடிகர் சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படத்தின் சாரிட்டி ப்ரீமியர் வழியாக வசதியற்ற நபர்களுக்கான அறுவைசிகிச்சைகளுக்கு நிதி திரட்டும் “ஐ ரீசர்ச் சென்டர்”

நம் நாட்டில் 13 லட்சம் பார்வைத்திறன் இழந்த நபர்கள் இருக்கும் நிலையில், 40,000 கருவிழி அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இத்திரைப்பட ப்ரீமியர் காட்சி மூலம் திரட்டப்படும் வருவாய் பயன்படுத்தப்படும்.

சென்னை, 27 செப்டம்பர் 2023: வசதியற்ற மற்றும் வசதி குறைவான மக்களுக்கு கண் அறுவைசிகிச்சைகளை சாத்தியமாக்கும் குறிக்கோளுடன் இயங்கி வரும் ஒரு பிரபல தொண்டு நிறுவனமான ஐ ரீசர்ச் சென்டர் (Eye Research Centre), பிரபல நடிகர் சித்தார்த் – ன் ‘சித்தா’ திரைப்பட சாரிட்டி ப்ரீமியர் காட்சி வழியாக நிதியினை திரட்டியிருக்கிறது. சீசன்ஸ் பிவிஆர் சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இச்சிறப்பான நிகழ்வு, சினிமாவின் ஈர்ப்பையும் மற்றும் மனிதாபிமானம் மிக்க கருணை உணர்வையும் ஒருங்கிணைத்த தருணமாக இருந்தது.

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் இயக்குனர் டாக்டர். அதியா அகர்வால் பேசுகையில், “வியப்பூட்டும் இந்த முன்னெடுப்பு நிகழ்வில் ஒரு தீவிர பங்காற்றுவது குறித்து நாங்கள் அளவில்லாத உற்சாகம் கொண்டிருக்கிறோம். திரைப்படத் துறையோடு ஒத்துழைப்புடன் செயல்படுவது என்பதற்கும் கூடுதலான இந்த தனிச்சிறப்பான நடவடிக்கை, பார்வைத்திறன் பிரச்சனைகளை கொண்டிருக்கும் நபர்களுக்கு பார்வைக்கான நம்பிக்கையையும், வாக்குறுதியையும் வழங்கும் ஒரு செயல்பாடாகவும் இருக்கிறது. இந்த திரைப்பட காட்சியின் வழியாக சேகரிக்கப்படும் நிதி, 40,000-க்கும் அதிகமான கருவிழி அறுவைசிகிச்சைகளை மேற்கொள்ள எங்களை திறன் உள்ளவர்களாக ஆக்கும். பார்வைத்திறன் இழந்த மற்றும் பாதிப்புள்ள நபர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடியதாக இந்த அறுவைசிகிச்சைகள் இருக்கும். கருவிழி சார்ந்த நோயினால் பார்வையற்றவர்களாக மாறியிருக்கும் 1.3 இலட்சம் இந்தியர்களின் வாழ்க்கையில் மீண்டும் வெளிச்சத்தை கொண்டு வருவதற்கு இந்த அறுவைசிகிச்சைகள் உதவும்.” என்று குறிப்பிட்டார்.

“எங்களது நோக்கம் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மை கொண்டது. பொருளாதார சூழலின் காரணமாக, சமூக தடைகளின் காரணமாக, சிகிச்சை பெறுவதற்கு பண வசதியற்ற நபர்களுக்கு அறுவைசிகிச்சைகளை வழங்கும் நோக்கத்தோடு எமது மருத்துவமனை குழுமம் இந்த முன்னெடுப்பில் இணைந்திருக்கிறது. “சித்தா” சாரிட்டி ப்ரீமியர் திரைப்படக்காட்சி நிகழ்வில் இணைவதன் மூலம் சமூகத்தில் வசதியற்ற நபர்களது வாழ்க்கையில் ஒளியேற்றும் இந்த பயனுள்ள முயற்சிக்கு நேரடி பங்களிப்பை வழங்க முன்வந்திருக்கும் நபர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.” என்று *டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் செயலாக்க இயக்குனர் & தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். அஸ்வின் அகர்வால்* குறிப்பிட்டார்.

இதயங்களை தொடுகின்ற மற்றும் மனங்களில் சிந்தனை தீப்பொறியை தூண்டுகின்ற கதைக்களத்தைக் கொண்டிருக்கும் “சித்தா” என்ற இந்த சிறப்பான திரைப்பட சாரிட்டி ப்ரீமியர் நிகழ்ச்சியினால் இந்த மாலைநேர நிகழ்ச்சியில், உற்சாகமும், எதிர்பார்ப்பும் உச்சத்தை தொட்டிருந்தது. *இந்தியன் ஐ ரீசர்ச் சென்டரின் தொண்டாற்றும் குறிக்கோளுக்கு வெளிப்படையாக ஆதரவளித்து ஊக்குவித்து வரும் இத்திரைப்படத்தின் கதாநாயகன் சித்தார்த் கூறியதாவது:* “உலகளவில் திரைப்பட ரசிகர்களையும் மற்றும் சமூக உறுப்பினர்களையும், உண்மையிலேயே அதிக பயனளிக்கும் ஒரு நோக்கத்திற்காக ஓரிடத்தில் ஒருங்கிணைக்க விழையும் இந்த சிறப்பான நடவடிக்கையில் ஆர்வமுள்ள ஒரு பங்கேற்பாளராக இடம்பெறுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இது, வெறுமனே ஒரு ப்ரீமியர் திரைப்படக்காட்சி மட்டுமல்ல; எனது இதயத்திற்கு முக்கியமான, நல்ல நோக்கத்திற்கான பங்களிப்பை வழங்குவதற்கான தருணமாகவும் இது இருக்கிறது.”