எப்போதும் ராஜா பாகம் 1 விமர்சனம்

வின்ஸ்டார் விஜய் தயாரிப்பில், H. முருகன் இயக்கத்தில், வின் ஸ்டார் விஜய், டெப்ளினா, கும்தாஜ், ஜோ மல்லூரி, சோமசுந்தரம், லயன்குமார், ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் எப்போதும் ராஜா பாகம் 1.

கதாநாயகன் வின் ஸ்டார் அண்ணன், தம்பி என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அண்ணன் காவல் ஆய்வாளராகவும், தம்பி வாலிபால் விளையாட்டு வீரராகவும் இருக்கிறார்கள். 

காவல் ஆய்வாளரான, அண்ணனுக்கு அவருடைய நேர்மையாலையே ஏகப்பட்ட எதிரிகள் இருக்கிறார்கள்.  

வாலிபால் விளையாட்டில் தமிழ்நாட்டின் சாம்பியனாக சாதிக்க துடிக்கும் தம்பிக்கும் பல எதிரிகள் இருக்கிறார்கள். வாலிபால் விளையாடுவதற்கு பல பிரச்சனைகளில் எதிர்கொண்டு விளையாட செல்கிறார்.

அண்ணன் தம்பி இருவரும் தங்களின் எதிரிகளையும் அவர்களால் ஏற்படும் பிரச்சனைகளையும் எப்படி சமாளித்து தனது வாழ்க்கையில் வெற்றி பெற்றார்கள் என்பதே எப்போதும் ராஜா பாகம் 1 படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : வின்ஸ்டார் விஜய்

இயக்கம் : H. முருகன்

இசை : கபிலீஸ்வரர் ராம்ஜி