பி வி நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா, திகந்த் மஞ்சாலே, கௌதமி, ஆனந்த், ஸ்ரீ லட்சுமி, குல்ஷன் தேவ்ய்யா, மன்ஜுஷா, சைதன்யா கிருஷ்ணா, ஸ்ரீமுகி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் எங்கள் தங்கம்.
நாயகியான சமந்தா காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அதனால் தன்னுடைய கணவரான திகந்த் மஞ்சாலே குடும்பத்தை சமாதானப்படுத்தி குடும்பத்துடன் சேர்வதற்காக தன்னுடைய சொந்த ஊருக்கு வருகிறார்கள்.
அந்த குடும்பத்தில் எல்லோரிடமும் நன்றாக நடந்து நல்ல பெயர் எடுத்து குடும்பத்தில் உள்ளவர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று தனக்கு தெரியாத வேலைகளை எல்லாம் தன்னுடைய தோழியை வைத்து செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் சிறைச்சாலையில் தண்டனையில் இருக்கும் கொலை குற்றவாளியான குல்ஷன் தேவ்ய்யா சிறையில் இருந்து தப்பித்து சமந்தாவை தேடி அங்கு வருகிறார்.
சமந்தாவின் கடந்த காலத்தை பற்றி சொல்லி சமந்தாவை தன்னுடன் அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார். சமந்தா தன்னால் வர முடியாது எனக்கு என் குடும்பம் தான் முக்கியம் என்று கூறி வர மறுக்கிறார்.
அதனால் குல்ஷன் தேவ்ய்யா அந்த மொத்த குடும்பத்தையும் நீ வரவில்லை என்றால் அழித்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.
அதன் பிறகு தன்னுடைய குடும்பத்தை காக்கும் முயற்சியில் சமந்தா ஈடுபடுகிறார்.
சமந்தா தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றினாரா? இல்லையா? தன்னுடைய கடந்த காலம் என்ன என்பதை பற்றி அந்த குடும்பத்தினரிடம் சொன்னாரா? இல்லையா? என்பதே எங்கள் தங்கம் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து மற்றும் இயக்கம் : B V நந்தினி ரெட்டி ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ் ஐ எஸ் சி படத்தொகுப்பு : தர்மேந்திர காகராலா
இசை : சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு நிறுவனம் : டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர்கள் : ராஜ் நிடிமொரு, சமந்தா, ஹிமான்க் ரெட்டி துவ்வூரு
மக்கள் தொடர்பு : யுவராஜ்

