தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக ஏற்கனவே ஸ்டாலின் சார்பில் திமுகவின் துணைத்தலைவர் துரைமுருகன் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசியுள்ளார்.
இந்நிலையில், மீண்டும் ஆளுநரை சந்திக்க திமுக சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதியை ஒட்டி ஆளுநரை சந்திக்க ஸ்டாலின் அனுமதி கேட்டுள்ளார். எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப் போவதாக திமுக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.