கல்லூரியிலேயே கல்லூரி மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமம்

டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறுகையில், தற்போது ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிப்பவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 24 வயதுடையவர்கள். அதில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பதாரர் உரிமம் வழங்கும் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருக்கிறது.

இந்த நடைமுறையை எளிதாக்க, கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரியில் ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதலில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் பிறகு மற்ற கல்லூரிகளிலும் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என்று கூறினார்