அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில், சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன், விடிவி கணேஷ், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் டபுள் ஆக்குபன்ஸி.
15 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவிக்கும் கணவன் மனைவியான போஸ் வெங்கடிற்கும், வினோதினிக்கும் ஒரு நாள் குழந்தை பாக்கியத்தை கடவுள் தருகிறார். அவர்களுக்கு கடவுள் அருளால் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
ஆனால் பிறந்த சில நொடிகளில் அந்த குழந்தை உயிரிழக்கிறது மீண்டும் கடவுளிடம் வேண்டுகிறார் போஸ் வெங்கட். தெய்வ அருளால் அந்த குழந்தை மீண்டும் உயிர் பெறுகிறது. ஆனால் அந்த உயிர் பெற்ற குழந்தை ஒரு விசித்திரமான அதிசயத்துடன் இருக்கிறது.
காலை ஆறு மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும் (ரேஷ்மா ) மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஆணாகவும் (சந்தோஷ்) வளரும் அந்த குழந்தைக்கு ரஜினி என்று பெயரிடப்படுகிறது.
இப்படிப்பட்ட மாறுதலுடனே அந்த குழந்தை வளர்ந்து இளம் வயதை அடைகிறது.
ஒரு உடலில் இருக்கும் இரு உயிர்களும் அவர்களுக்குள்ளான தகவல் தொடர்பை செல்போன் மூலமாக பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் வினோதினியும் போஸ் வெங்கட்டும் ஒரு விதத்தில் இறந்துவிட ரஜினி அந்த ஊரைவிட்டு சென்னைக்கு வருகிறார்.
பகலில் பெண்ணாக இருக்கும் ரஜினி தன்னுடைய இந்த மாற்றத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேருகிறார். ரஜினி வேலை செய்யும் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் வினோத்ரிசன் ரஜினி இது காதல் கொள்கிறார்.
ஆணாக இருக்கும் ரஜினி இரவில் ஒரு பாரில் வேலைக்கு செல்கிறார். அங்கு வரும் சம்யுக்தாவை பார்த்ததும் காதல் வயப்படுகிறார்.
தங்களுடைய இந்த நிலையை காதலர்களிடம் சொல்லி காதலில் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே டபுள் ஆக்குபன்ஸி படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குநர் : அஸ்வின் கந்தசாமி
தயாரிப்பாளர்கள் : ஏசிஎஸ் அருண் குமார் (பென்ஸ் மீடியா) மற்றும் குஷ்பு சுந்தர் (அவ்னி மூவிஸ்)
கிரியேட்டிவ் புரொடியூசர் : அனந்திதா சுந்தர்
இசை : சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு : சந்தகுமார் சக்கரவர்த்தி
படத்தொகுப்பு : பிரவீன் ஆண்டனி
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

