சமூக செயற்பாட்டாளரும், கக்கூஸ் ஆவணப்பட இயக்குநருமான திவ்ய பாரதி மதுரையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு மாணவியாக இருந்தபோது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் மதுரை மாவட்ட 2 வது குற்றவியல் நீதிமன்ற உத்தரவுப்படி இவர் கைது செய்ய்யப்பட்டுள்ளார். இவருக்கு சமீபத்தில் சமூக செயற்பாட்டுக்காக பெரியார் சாக்ரடீஸ் விருது வழங்கப்பட்டது.
சக மாணவரின் சடலத்தை வாங்க மறுத்து 2009 ஆம் ஆண்டு மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் திவ்யபாரதி கைது செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள திவ்யபாரதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட திவ்யபாரதிக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளதாக திவ்யபாரதியின் வக்கீல் கனகவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.