காலம் கடந்து ஆளுநர் அறிவித்தாலும் திமுக அதனை வரவேற்கிறது என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 15 நாட்கள் அவகாசம் எதற்காக என தெரியவில்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். சசிகலா குரூப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து இன்று மாலை அவர் முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து கருத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். காலம் கடந்து ஆளுநர் அறிவித்தாலும் திமுக அதனை வரவேற்கிறது என்றார். மேலும் 15 நாட்கள் அவகாசம் எதற்காக என தெரியவில்லை என்றும் ஸ்டாலின் கூறினார். இந்த அவகாசம் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.