தியா விமர்சனம்

படிக்கும் வயதில் காதலிக்கும் நாயகி சாய் பல்லவியும், நாயகன் நாக சௌரியாவும் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வதால் சாய்பல்லவி கர்ப்பமாகிறார்.

இது இவர்கள் இரு வீட்டாருக்கும் தெரிய வர பிரச்னை ஏற்பட்டு பிறகு, படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். குழந்தை இப்பொழுது வேண்டாமென்று முடிவெடுத்து கருக்கலைப்பு செய் முடிவு எடுக்கின்றனர் பெரியவர்கள்.

நாக சௌரியா சம்மதத்துடனும்,  சாய் பல்லவியின் சம்மதம் இல்லாமல் கருவையும் கலைத்து விடுகின்றனர்.

5 ஆண்டுகளுக்கு பிறகு படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. தன் கருவில் இருந்த குழந்தைக்கு பெயர் வைத்தும், இப்போது எப்படி இருக்கும்? என்று ஒவ்வொரு வருடமும் குழந்தையின் படத்தை வரைந்து வருகிறார் சாய் பல்லவி.

கலைந்த கரு 5 ஆண்டுகளுக்கு பிறகு (குழந்தை வெரோனிகா) ஆவியாக, வந்து கலைக்க காரணமாக இருந்தவர்களை கொலை செய்கிறது. அனைவரையும் கொலை செய்துவிட்டு கடைசியில் சாய்பல்லவியின் கணவர் நாக சௌரியாவையும் கொலை செய்ய முயற்சி செய்கிறது. கொலைக்கான கரணம் சாய் பல்லவிக்கு தெரிய வருகிறது,

இறுதியில் நாக சௌரியா கொலை செய்யப்பட்டாரா? அல்லது சாய் பல்லவி காப்பாற்றினாரா? என்பது படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள் : நாக சௌரியா, சாய் பல்லவி, பேபி வெரோனிகா, நிழல்கள் ரவி, ரேகா, சந்தான பாரதி மற்றும் பலர்

இயக்கம் : விஜய்
இசை : சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு: நீரவ் ஷா
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: லைகா நிறுவனம்

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்