டெவில் விமர்சனம்

மாருதி பிலிம்ஸ் மற்றும் எச் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி தயாரிப்பில், ஆதித்யா இயக்கத்தில்,  விதார்த், திரிகன், பூர்ணா, சுபஸ்ரீ, மிஷ்கின் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘டெவில்’.

ஒருவித மன உளைச்சலில் காரில் வந்து கொண்டிருக்கும் பூர்ணா, எதிரில் பைக்கில் வரும் திரிகன் மீது மோதி விடுகிறார், இருவரும்  விபத்தில் சந்தித்து கொள்கின்றனர். தன் காரில் அடிபடும் திரிகனை காப்பாற்றி பூர்ணா மருத்துவமனையில் சேர்த்து உதவிகள் செய்கிறார். இவர்கள் இருவருக்குள்ளும் சில நாட்களில் நட்பு ஒரு படி மேலே போய் காதலாக மாறும் தருணத்தில் பூர்ணா வீட்டுக்கு வருகிறார்.

அங்கே தன் கணவர் விதார்த் அமர்ந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு மௌனமாக செல்கிறார். ஒரு வருடங்களுக்கு முன் பூர்ணா விதார்த்தின் வாழ்க்கை பிளாஷ் பேக் ஆக வருகிறது.

பிரபல வக்கீலாக இருக்கும் விதார்த்தை பெற்றோர்களின் விருப்பப்படி திருமணம் செய்து கொள்கிறார் பூர்ணா. திருமணம் முடிந்து பலவித ஆசைகளுடன் வரும் பூர்ணா கணவனின் நடவடிக்கையால் ஏமாற்றம் அடைகிறார்.

இந்த சமயத்தில் ஒரு நாள் பூர்ணா, விதார்த்தின் அலுவலகத்திற்கு வருகிறார்.

அப்போது அங்கே உடன் வேலை செய்யும் சுபஸ்ரீ உடன் விதார்த் நெருக்கமாக இருப்பதை பூர்ணா பார்த்து அதிர்ச்சியாகி கோபப்பட்டு வெளியேறி விடுகிறார்.

இந்த நிலையில் தான் திரிகனின் நட்பும் பழக்கமும் ஏற்பட்டது. கணவன் விதார்த் திருந்தி பூர்ணாவிடம் மன்னிப்பு கேட்கிறார். 

விதார்தின் மன்னிப்பை பூர்ணா ஏற்றுக் கொண்டு இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? திரிகன் என்ன செய்தார்? என்பதை பரபரப்பாகும் திரில்லர் ஆகும் சொல்லி இருக்கும் படமே ‘டெவில்’.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இணை தயாரிப்பாளர் : பி.ஞானசேகர்

இசை : மிஸ்கின்

ஒளிப்பதிவாளர் : கார்த்திக் முத்துக்குமார்

எடிட்டர் : இளையராஜா.எஸ்

கலை இயக்குனர் : ஆண்டனி மரியா கெர்லி

பாடல் வரிகள் : மிஷ்கின்

ஒலி கலவை : தபஸ் நாயக்

ஒலி வடிவமைப்பு : எஸ்.அழகிய கூத்தன்

இணை இயக்குனர் : ஆர்.பாலச்சந்தர்

வண்ணக்கலைஞர் : ராஜராஜன் கோபால்

ஸ்டண்ட் : ராம்குமார்

ஆடை வடிவமைப்பு : ஷைமா அஸ்லம்

ஸ்டில்ஸ் : அபிஷேக் ராஜ்

விளம்பர வடிவமைப்பு : கனதாசன் டி.கே.டி

தயாரிப்பு நிர்வாகி : எஸ்.வெங்கடேசன்

லைன் புரொடியூசர் : எல்வி ஸ்ரீPகாந்த்லக்ஷ்மன்

மக்கள் தொடர்பு : சதீஷ் குமார்