டிடி ரிட்டர்ன்ஸ் விமர்சனம்

ஆர்கே எண்டர்டெயின்மெண்ட் சார்பில், சி.ரமேஷ் குமாரின் தயாரிப்பில், எஸ். பிரேம் ஆனந்தின் இயக்கத்தில், சந்தானம், சுரபி, ரெடிங் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர்,டைகர் தங்கதுரை, மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், பெப்சி விஜயன், பிபின், தீனா, சேது, தங்கதுரை, ரீட்டா, மானஸி, தீபா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் டிடி ரிட்டர்ன்ஸ்.

பல வருடங்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில் மிகப் பெரிய பங்களாவில் வாழ்ந்த ஒரு குடும்பம், தடை செய்யப்பட்ட சூதாட்டத்தில் ஈடுபடுகிறது. சூதாட்டத்தில் சூழ்ச்சி செய்து தோற்பவர்களை அந்த குடும்பம் கொலை செய்து விடுகிறது.

இதனை தெரிந்து கொண்ட ஊர் மக்கள் அந்த குடும்பத்தை பங்களாவில் வைத்து எரித்துக் கொன்றுவிடுகிறார்கள்.

பல வருடங்களுக்கு பிறகு தற்போது பெரும் புள்ளியாக இருக்கும் பெப்சி விஜயனிடமிருந்து பணத்தை பிபின் மற்றும் முனீஷ்காந்த் டீம் கொள்ளையடிக்க, அவர்களிடமிருந்து மொட்டை ராஜேந்திரன் டீம் கொள்ளையடிக்கிறது. ஆனால், அந்த பணமோ சந்தானத்தின் கையில் எதேட்சையாக கிடைக்கிறது. பணத்தோடு பயணிக்கும் சந்தானத்தின் நண்பர்கள் போலீசிடம் இருந்து தப்பிக்க, அந்த பங்களாவின் வாசலில் பணத்தை மறைத்து வைக்கிறார்கள். ஆனால் எதிர்பாராத வகையில் பணம் இருந்த பேக் பங்களாவிற்குள் இழுத்துச் செல்லப்பட்டு விடுகிறது.

பணத்தை எடுத்தால் தான் சந்தானத்தின் காதலி சுரபியை காப்பாற்ற முடியும் என்ற இக்கட்டான நிலையில், சந்தானம் மற்றும் குழுவினர் பணத்தைத் தேடி அங்கு செல்கின்றனர்.

சென்றதும் அங்குள்ள பேய்கள் இவர்களை வைத்து கேம் ஆடுகிறது.

சந்தானத்தை தேடி செல்லும் பெப்ஸி விஜயன், பிபின், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட அனைவரும் அந்த பேய் வீட்டில் சிக்கிக்கொண்டு விளையாட்டில் பங்கேற்க, விளையாட்டில் வென்றால் பணம், தோற்றால் மரணம் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

இறுதியில் அவர்கள் விளையாட்டில் வெற்றி பெற்று உயிருடன் வந்தார்களா? இல்லையா? என்பதை முழு நீள காமெடியாக சொல்லி அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்து அனுப்புகிறது ‘டிடி ரிட்டன்ஸ்’.

தொழில் நுட்ப கலைஞர்கள்

இசை : ஆப்ரோ
ஒளிப்பதிவு : தீபக் குமார்
எடிட்டர் : என்.பி.ஸ்ரீகாந்த்
கலை : ஏ.ஆர்.மோகன்
சண்டை : ஹரி தினேஷ்
நடனம் : சாண்டி
உடை : ஜாஸ்மின் ஜோசப்
பிஆர்ஒ : நிகில் முருகன்