சமையல் ராணி போட்டி

2018-ம் ஆண்டின் திருமதி சென்னையை தேர்ந்தெடுப்பதற்கான சமையல் ராணி போட்டி சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது. திருமணமான பெண்களின் திறமைகளுக்கு மேடை அமைத்துக் கொடுக்கும் வகையில் திருமதி சென்னை போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 6 வாரங்கள் நடைபெறும் போட்டிக்கான போட்டியாளர் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது.
டிசம்பர் 14-ம் தேதி சென்னை லீலா பேலஸில் நடைபெறும் இறுதிச்சுற்றில் திருமதி சென்னை தேர்ந்தெடுக்கப்படுவார். இதில் பிரபலங்கள், வல்லுனர்கள் பங்கேற்று வெற்றியாளரை தேர்ந்தெடுக்க உள்ளனர். 
முதல் 25 இடங்களைப் பிடித்த போட்டியாளர்கள் ஆரோக்கியம், திறமை, பொது அறிவு ஆகியவற்றில் சோதிக்கப்படுவார்கள். பன்முகத் திறமை பெற்ற போட்டியாளரே திருமதி சென்னையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மகுடம் சூட்டப்பட்டுவார். 
திருமதி சென்னையை தேர்ந்தெடுப்பதற்கான சமையல் ராணி சுற்று சென்னை சேத்துப்பட்டு போஷ் அரங்கில் ஞாயிறு அன்று நடைபெற்றது. சர்வதேச சமையல் கலை வல்லுனர் திரு போக்டன் மக்சிமோவிச் மற்றும் பிரபல 
சமையல் கலைஞர் திருமதி மல்லிகா பத்ரிநாத் பங்கேற்று போட்டியாளர்களுக்கு சமையல் கலை குறித்த சிறப்புகளை எடுத்துரைத்தனர். உணவை சுவையாக தயாரிப்பதற்கும்  அழகாக பரிமாறுவதற்கும் ஆலோசனைகளை வழங்கினர். 
போட்டியின் இறுதியில் பிரசித்திப்பெற்ற இத்தாலிய பிரஸ்தாவை தங்களுடைய பாணியில் போட்டியாளர்கள் பரிமாறினார்கள். 
திருமதிகள்  சமைத்த உணவுகளை விருந்தினர்களும், பார்வையாளர்களும் சுவைத்து பாராட்டு தெரிவித்தார்கள். 
திருமதி சென்னை பற்றிய கூடுதல் தகவல்களை அறிய www.mrschennai.com என்ற வலைத்தளத்திற்குள் செல்லுங்கள்