கோவில்பட்டியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தொடக்கம் – முதல் நாள் போட்டியில் பாண்டிச்சேரி, சேலம் அணிகள் வெற்றி

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 16 வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்கு பெரும் பி. ஆர் தேவர் கோப்பைக்கான மாவட்ட அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள்  தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் இதன் பி பிரிவு போட்டிகள் கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் கே.ஆர் ஆர்ட்ஸ் கல்லூரி மைதானங்களில் இன்று தொடங்கியது. இந்த பிரிவில் தூத்துக்குடி, சேலம், விழுப்புரம், மற்றும் பாண்டிச்சேரி அணிகள் பங்கு பெறுகின்றன.

முதல் நாள் போட்டிகளில் தூத்துக்குடி மாவட்ட அணி, பாண்டிச்சேரி அணியுடனும், விழுப்புரம் மாவட்ட அணி சேலம் அணியுடனும் மோதியது. கே.ஆர்.ஆர்ட்ஸ் கல்லூரியில் மைதானத்தில் நடைபெற்ற பேட்டியில் பாண்டிச்சேரி – தூத்துக்குடி அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த பாண்டிச்சேரி அணி – 48.4 ஓவர்களில் 10விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற நிலையில் விளையாடிய தூத்துக்குடி அணி 25.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்து வெறும் 78 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் சேலம் – விழுப்புரம் அணிகள் மோதியது. இதில் முதலில் களம் இறங்கி விழுப்புரம் அணி 46.5 ஓவர்களில் 10விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது. 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் விளையாடி சேலம் அணி 19.2 ஓவரில் விக்கெட் இழப்பு இல்லாமல் 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

நாளை நடைபெறும் போட்டியில் பாண்டிச்சேரி – விழுப்புரம் அணிகளும், தூத்துக்குடி – சேலம் அணிகளும் மோதுகின்றனர்.