மணல் தட்டுபாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு நிர்ணய விலையில் மணல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர்விடுதி முன்பு இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணல் தட்டுபாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு நிர்ணய விலையில் மணல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், கட்டுமானப்பொருள்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும், மாநிலம் முழவதும் நலவாரிய பதிவு புதுப்பித்து, பணப்பன்களை ஒழுங்குபடுத்த வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு புதுச்சேரி மாநில அரசு வழங்குவது போல மழைகால நிவாரணம் வழங்க வேண்டும்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு இயற்கை மரண நிதியாக ரூ.1லட்சம் வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்களின் பெண்குழந்தைகளுக்கு திருமண உதவியாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர்விடுதி முன்பு சி.ஐ.டி.யூ இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் மாரிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.