தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் டாப் 10 படங்களின் வசூல் விவரம்

தமிழ் சினிமாவின் மார்க்கெட் வருடத்திற்கு வருடம் அதிகமாகிக்கொண்டே செல்கின்றது. தயாரிப்பாளர் & விநியோகஸ்தரான G .தனஞ்ஜெயன் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் டாப் 10 படங்களின் வசூல் விவரத்தை பல முக்கிய திரைப்பட விநியோகஸ்தர்களிடம் கலந்து பேசி தகவலை சேகரித்து , அந்த தகவலை ஒருங்கிணைத்து டாப் 10 படங்களின் வசூல் விவரத்தை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார் .

அந்த வரிசையில் இதுவரை தமிழ்சினிமாவில் வெளியான படங்களில் டாப் 10 படங்களின் வசூல் விவரம் :

தளபதி விஜயின் ‘பிகில் ‘ திரைப்படம் கிட்டத்தட்ட 152 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து முதல் இடத்திலும் , பிரபாஸின் ‘பாகுபலி2’ கிட்டத்தட்ட 150 கோடி வசூல் செய்து 2 வது இடத்திலும் , அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’ கிட்டத்தட்ட 140 கோடி வசூலில் 3 வது இடத்திலும் ,
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2 .0 ‘ திரைப்படம் கிட்டத்தட்ட 135 கோடி வசூல் செய்து 4 வது இடத்திலும் , தளபதி விஜயின் ‘மெர்சல் ‘ கிட்டத்தட்ட 130 முதல் 132 கோடி வசூல் செய்து 5 வது இடத்திலும் , சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘எந்திரன் ‘ கிட்டத்தட்ட 130 கோடி வசூல் செய்து 6 வது இடத்திலும் , தளபதி விஜயின் ‘சர்கார்’ கிட்டத்தட்ட 125 கோடி வசூல் செய்து 7 வது இடத்திலும் , சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட ‘ கிட்டத்தட்ட 110 கோடி வசூல் செய்து 8 இடத்திலும் , ‘கபாலி ‘ திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடி வசூலில் 9 வது இடத்திலும் , தளபதி விஜயின் தெறி மற்றும் சீயான் விக்ரமின் ‘ஐ’ ஆகிய இரண்டு படங்கள் கிட்டத்தட்ட ரூ 100 கோடி வசூல் செய்து 10 வது இடத்தில் உள்ளது .

இந்த டாப் 10 படங்களில் நான்கு படங்கள் தளபதி விஜயின் படங்கள் , மேலும் நான்கு படங்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

முதல் இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய்யை தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங் என இந்த தகவலை தளபதி விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர் .